புதன்கிழமை, அக்டோபர் 23, 2024

கார் ரேஸில் கப் அடிப்பாரா அஜித்? ’அஜித்குமார் கார்’ ரேஸிங் அணியின் புதிய அப்டேட்


அஜித்குமரின் ரேஸிங் அணியின் லோகோ வெளியாகியுள்ள நிலையில், அஜித்குமார் மற்றும் அவரது டீமிற்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜூன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தில் ஷூட்டிங் முடிந்து, இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியான நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தக் கேள்வி அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் காது வரை எட்டியுள்ளது.

இப்படி லட்சக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ள அஜித்தின் ஒவ்வொரு படமும் அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருப்பதால் தான் படத்தில் ஒவ்வொரு அப்டேட்டின் போது மகிழ்ச்சியடைகின்றனர். விடாமுயற்சி படம் பொங்கல் வெளியீடாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, மார்க் ஆண்டனி என்ற ஹிட் படம் கொடுத்த, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விரையில் இபப்டத்தின் அட்பேட்டை படக்குழு வெளியிடும் என தெரிகிறது.

கார் மற்றும் பை ரேஸிங் மீது ஆர்வம்

சினிமாவை தாண்டி, கார் ரேஸ், பைக் ரேஸில் ஈடுபாடு கொண்டிருக்கும் அஜித், முன்னணி நடிகர் என எந்த பந்தாவும் இல்லாமல் உலக பைக் சுற்றுப் பயணம் செய்ததுடன், தன்னைப் போன்ற பைக் பிரியர்களுக்கு வழிகாட்டுவதற்காக வீனஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சமீபத்தில் கின்னஸ் சாதனை படைத்தது.

இந்த நிலையில், ஷூட்டிங் இல்லாத நேரத்தில் கார் ரேஸ், பைக் ரேஸில் கலந்து கொண்டு வரும் அஜித், துபாயில் நடக்கவிருக்கும் கார் ரேஸில் பங்கேற்க இருப்பதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே அஜித்குமார் ரேஸிங் என்ற புதிய கார் பந்தய அணியை அவர் தொடங்கியிருக்கிறார். பன்முகங்களை கொண்ட திறமையாளராக அஜித் இந்த நிறுவனத்தின் மூலம் இந்திய இளைஞர்களுக்கும், திறமையான மற்றும் கார் ரேஸில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என கூறப்பட்டது.

அஜித்குமார் ரேஸிங் அணி

இந்த நிலையில் ஐரோப்பாவில் நடக்கவுள்ள 24 எச் கார் ரேஸில் அஜித்தின் அணி பங்கேற்க இருப்பதாக சில மாதங்களாக தகவல் வெளியாகி வந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில், போர்ஷே 992 ஜிடி3 கப் பிரிவில் அஜித்குமார் ரேஸிங் அணி பங்கேற்கவுள்ளது. இதற்காக அஜித்குமார் ரேஸிங் அணியின் லோகே இன்று வெளியாகியுள்ளது.

இதில், அந்த அணியின் உரிமையாளரும் ஓட்டுனராகவும் அஜித் செயல்பாடுவார் என என்று கூறப்பட்டுள்ளது. இந்த அணியில் அஜித்துடன் மேலும் 3 கார் ரேஸர்கள் இடம்பெற்றுள்ளனர். எனவே வரும் போட்டியில் அஜித் அணி நிச்சயம் சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு சினிமா துறையினரும், ரசிகர்களும் அஜித் குழுவிற்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
ajithkumar racing team

- Advertisement -spot_img

Trending News