திரையுலகில் எப்படியாவது கால் பதித்தாக வேண்டும் என தீராத தாகத்துடன் அலைந்து வந்த விக்ரமை, சின்னத்திரை இருகரம் ஏந்தி வரவேற்றது. தொடர்ந்து தனது அசாதாரண நடிப்பின் மூலம், இன்று உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார் விக்ரம்.
கோலிவுட்டில் ஹீரோவாக நடித்த பின்னரும், பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் டப்பிங் கொடுக்கும் வேலையை செய்து வந்தார். அமராவதி படத்தில் அஜித்திற்கும், காதலன் படத்தில் பிரபுதேவாவிற்கும், விஐபி, காதல் தேசம் ஆகிய படங்களில் அப்பாஸுக்கும் விக்ரம் டப்பிங் கொடுத்துள்ளார்.
ஒரு படத்திற்காக உடலை வருத்திக்கொண்டு நடிப்பதில் நடிகர் விக்ரமும் ஒருவர். கல்லூரி மாணவனாக ஹேண்ட்சம் தோற்றத்தில் வரும் விக்ரம், பின்பாதியில் மன நலம் பாதிக்கப்பட்டவராக நடிப்பதற்காக பல நாட்கள் பட்டினி கிடந்து உடல் எடையை குறைத்து, மொட்டை தலையுடன் நடித்தார். இந்த படம் மூலமாக தான் விக்ரம் தனது ரசிகர்களால் ‘சியான் விக்ரம்’ என செல்லமாக அழைக்கப்பட்டார்.
மனைவிக்கு பிடிக்கவில்லை.. முதல் காதல் இது தான்..
இவர் ஷைலஜா என்பவரை காதலித்து 1992 ஆம் ஆண்டு குருவாயூர் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு துருவ் என்ற மகனும், அக்சிதா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் அவர் கொடுத்த நேர்காணல், ஒன்றில், அவர் மனைவியை பற்றி ஒரு சில விஷயங்களை சொல்லி இருந்தார்.
விக்ரம் மனைவி ஷைலஜாவின் குடும்பத்தினர் பாடலாசிரியர் மற்றும் கல்வியாளர்களாக இருப்பவர்கள். சினிமாவில் நடிப்பதை தொடக்க காலங்களில் அவரது மனைவி விரும்பவில்லை என்று விக்ரம் கூறியுள்ளார். மனைவியின் வற்புறுத்தலை நிராகரித்த விக்ரம், சினிமா தான் தனது முதல் காதலி என்றும் அதற்கு பின்னர்தான் ஷைலாஜா என்றும் கூறி தனது உறுதியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பின்னாளில் மனைவி ஷைலஜா விக்ரமின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். அதுபற்றி நேர்காணலில் விவரித்த விக்ரம், தான் இந்த நிலைமைக்கு உயர்ந்ததற்கு மனைவிதான் காரணம் என்றும் தெரிவித்தார்.