புதன்கிழமை, அக்டோபர் 23, 2024

2 ஆஸ்கர் விருது வென்று என்ன பிரயோஜனம்.. அதை யாரும் கண்டுக்கலயே.. ஏ.ஆர்.ரஹ்மான் ஓபன் டாக்

இசையில் புதுமை விரும்பிகளுக்கு எப்போது தன் இசையாலும் பாடல்களாலும் விருந்து வைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குனர்கள் தவறாக வழி நடத்துகிறார்கள் என்று ஒரு பேட்டியில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்கர் நாயகன்

சினிமாவில் இருப்பவர்களுக்கு ஆகப் பெரும் லட்சியமாக இருப்பதெல்லாம் எப்படியாவது உழைத்து அந்த ஆஸ்கர் விருதை வெல்ல வேண்டும் என்பதுதான். இந்த விருதை 2007 ஆம் ஆண்டு வெளியான ஸ்லம் டாக் மில்லியனார் என்ற படத்திற்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான். அதுவும் ஒரு விருதல்ல, இரண்டு விருதுகள் வென்று ஆஸ்கர் விழா மேடையில் தமிழில் எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறியவர்.

இந்தியாவின் பொக்கிஷமாகப் பார்க்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆரம்ப காலக்கட்டத்தில் கீபோர்ட் பிளேயராக இளையராஜா, எம்.எஸ்.வி உள்ளிட்டோரிடம் சிறுவயதில் இருந்தே பணியாற்றிய பின் சொந்தமாக ஸ்டுடியோ ஆரம்பித்து, அதில் இருந்து விளம்பரங்களுக்கு ஜிங்கில்ஸ் அமைத்து தன் திறமையை நிரூபித்து வந்தார். இவை எல்லாம் பெரிய ஹிட்டடிக்கவே, மணிரத்னம் அப்போது தனது ரோஜா படத்தில் ஏ..ஆர்.ரஹ்மானை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார்.

அன்றிலிருந்து இன்றுவரை தனது இசையால் மக்களை மகிழ்வித்து இசையிலும், சினிமாவிலும் பல்வேறு புதுமைகள் செய்து கொண்டே இருக்கிறார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்துறையில் இருந்தாலும் இன்னும் இளைஞர்களுக்கு போட்டியாக தரமான பாடல்கள் வழங்கி முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார்.

7 முறை தேசிய விருது

மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்திற்கு சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருதை சமீபத்தில் தேசிய விருது விழாவின் பங்கேற்ற ஏ.ஆ.ரஹ்மான், 7 வது முறையாக விருது பெற்று நாட்டிலேயே 7 வது முறை தேசிய விருது பெற்ற முதல் இசையமைப்பாளர் என்ற சாதனை படைத்தார்.

ஆஸ்கர் விருது பற்றி யாரும் பேசுவதில்லை

இந்த நிலையில் பிரபல நாளிதழுக்குப் பேட்டியளித்த ஏ.ஆர்.ரஹ்மான், ’’நான் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. நான் தேர்வு செய்யும் படைப்புகளில், என் படைப்பு சார்ந்த உள்ளுணர்வுகளை திருப்தி செய்வதாக இருந்தால் மட்டும்தான் அதைத் தேர்வு செய்து அதில் வேலை செய்கிறேன். நான் ஆஸ்கர் விருதுகள் வென்றே. அப்போது பரவலாகப் பேசப்பட்டது. இப்போது யாரும் அதைப் பற்றிப் பேசுவதில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ’’எனக்கு விருப்பமான படங்களில் பணியாற்றி அடுத்த தலைமுறைக்கு தேவையான இசையை கொடுக்க விரும்புகிறேன். அதனால் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை எனக்கு. பொதுவாக இரு விஷயங்கள் தான் எனக்கு எரிச்சலூட்டும் வகையில் உள்ளன. அவை, டைமருடன் கூடிய செல்ஃபி மற்றும் என்னை தவறாக வழி நடத்திய இயக்குனர்கள். ஏனெனில் பாடலில் பல வித்தியாசமான வரிகளை உட்புகுத்துவதால் இப்பாடலை மேடையில் பாட முடியாது என எனக்குத் தோன்றினால் அதை மறுத்துவிடுவேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ராஹ்மான் இசையமைக்கும் புதிய படங்கள்

ஏ. ஆ. ரஹ்மான் தற்போது தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய படங்களில் பிஷியாக உள்ளார். அதன்படி,தெலுங்கில் புச்சி பாபு சனாவின் புதிய படத்திற்கும், தமிழில் கமலின் தக்லைஃப், ஜெனி, காதலிக்க நேரமில்லை, மூன் வாக், சூர்யா 45 ஆகிய படங்களில் கமிட் ஆகியுள்ளார். அதேபோல், பாலிவுட்டில் சாலா, லாகூர், 1947, தேரே இஷ்க் மெயின், ராமாயணம், கமல் அவுர் மீனா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து இளம் இசையமைப்பாளருக்கு இன்றும் டஃப் கொடுத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஏ.ஆர்.ரஹ்மான் தான் தேர்வு செய்த இயக்குனர், நடிகர்களுடன் மட்டும்தான் இசையமைக்கிறார். அதற்கு நிறைய நேரம் எடுகிறார் என விமர்சிக்கப்பட்டாலும் அவரது சிந்தனை ஓட்டத்திற்கும், கதையின் தன்மைக்கும் ஏற்றபடி தான் அவர் இசையமைத்து ஆரம்ப காலகட்டத்தில் நிரூபித்து முதல் படத்திலேயே தேசிய விருது வென்றார். இப்போதும் வென்றுள்ளார். எனவே விமரச்னங்களைக் கண்டுகொள்ளாமல் அவர் சென்ற அன்பின் வழிப் பாதை தான் இந்தளவுக்கு அவரை உயர்த்தியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News