வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

தாக்கத்தை ஏற்படுத்தப் போகும் கங்குவா.. 1000 கோடியை தட்டுவாரா சூர்யா.? ரிலீசுக்கு முன்பே வெளிவந்த முதல் விமர்சனம்

Kanguva Review: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா நவம்பர் 14 திரைக்கு வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு வருட காத்திருப்பின் பலனாக ரசிகர்கள் அதை திருவிழா போல் கொண்டாட காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே பாடல்கள் ட்ரெய்லர் வெளியாகி இருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் வேட்டையனால் தள்ளிப்போனது. அதை அடுத்து தடைகளைத் தாண்டி ரிலீஸ் ஆக இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கிறது.

ஆனால் அதற்கு முன்பே படத்தின் பிரமோஷன் தொடங்கிவிட்டது. சமீபத்தில் இயக்குனரோடு இணைந்து சூர்யா கொடுத்த பேட்டியில் கூட பல விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

மதன் கார்க்கி கொடுத்த முதல் விமர்சனம்

இந்நிலையில் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது. அதன்படி மதன் கார்க்கி தன்னுடைய சோசியல் மீடியா தளத்தில் கங்குவா படம் பற்றி குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின் வசனகர்த்தாவான இவர் தற்போது முழு படத்தையும் பார்த்துள்ளார்.

ஏற்கனவே டப்பிங் போது காட்சிகளை பார்த்தேன். ஆனால் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் இதன் தாக்கம் அதிகமாகி கொண்டே இருக்கிறது. கதையின் ஆழமும் பிரம்மாண்டமும் இசையின் கம்பீரமும் வியக்க வைக்கிறது.

அதற்கு உயிர் கொடுப்பது போல் சூர்யாவின் நடிப்பு மிரட்டலாக இருக்கிறது. அதே போல் சிறுத்தை சிவாவின் கனவுக்கு ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் உயிர் கொடுத்துள்ளது என தெரிவித்துள்ளார். இப்படி ரிலீசுக்கு முன்பே அவர் கொடுத்துள்ள விமர்சனம் படத்திற்கு பிரமோஷன் ஆக மாறி இருக்கிறது.

Trending News