Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் செழியன், பாக்கியாவிற்கு உதவக் கூடாது என்பதற்காக கோபி பொய் சொல்லி செழியனை ஹோட்டலுக்கு வர வைத்து விட்டார். ஆனாலும் பாக்கியா யாருடைய தயவும் இல்லாமல் பிரச்சினையை சரி செய்து விட்டார். இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் கோபி, செழியனை விட்டுவிட்டார்.
பிறகு வீட்டிற்கு போன செழியன் குற்ற உணர்ச்சியில் பாக்கியவிடம் மன்னிப்பு கேட்கிறார். பாக்கியா எதற்கு என்று கேட்ட நிலையில் என்னால் உனக்கு உதவ முடியாமல் போய்விட்டது என்பதை சொல்கிறார். உடனே பாக்யா இதெல்லாம் ஒரு பிரச்சினை இல்லை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ இதைப் பற்றி யோசிக்காமல் போய் ரெஸ்ட் எடு என்று சொல்லி அனுப்புகிறார்.
இதெல்லாம் பார்த்து ஈஸ்வரி, நேத்து அவ்ளோ பிரச்சனை நடந்து போது கூட உனக்கு துணையாக வந்து செழியன் நிற்கவில்லை. என்னதான் பிள்ளைகள் மீது நாம் பாசத்தை கொட்டினாலும் நம்மளை நம்ம தான் பார்க்க வேண்டும். அதனால் நீ யாரையும் நம்பாதே, உன் கையிலயும் கொஞ்சம் பணத்தை சேர்த்து வைத்துக்கொள். யார் எந்த நிமிஷம் மாறுவாங்க என்பது சொல்ல முடியாது. இனி உன்னை பற்றி மட்டும் யோசித்து பார்த்துக் கொள் என்று அட்வைஸ் பண்ணுகிறார்.
உடனே செல்வி, உன் மாமியார் சொல்வதும் கரெக்ட் தான் நீ யாரையும் நம்பாதே என்று பாக்கியம் சொல்கிறார். இதனைத் தொடர்ந்து செழியன் ஆபீஸ்க்கு போவான் என்ற நினைப்பில் பாக்யா சமையல் செய்து லஞ்ச் பாக்ஸ் வைத்து கொடுக்கிறார். அப்பொழுது செழியன் வாங்கிக் கொண்டு வேலை போன விஷயத்தை சொல்ல மறுத்து விடுகிறார்.
ஆனால் அங்கிருந்த ஈஸ்வரி திடீரென்று ரூமுக்குள் போய் கதவை அடைத்து விடுகிறார். உடனே செழியன் மற்றும் பாக்யா கதவைத் தட்டி என்ன ஆச்சு என்று கேட்கிறார்கள். ஆனால் ஈஸ்வரி எதுவும் சொல்லாமல் கதவையும் திறக்கவில்லை. பிறகு பாக்கியா, செழியினை நீ ஆபீஸ்க்கு போ நான் பாட்டியிடம் பேசிக் கொள்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
அதன் பிறகு வெளியே வந்த ஈஸ்வரி இடம் உங்களுக்கு அப்படி என்ன செழியன் மீது கோபம் ஏன் கோபமாக உள்ள போயிட்டீங்க என்று கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி, செழியன் மீது எனக்கு வருத்தம் இருக்கிறது உண்மைதான். ஆனால் அதற்காக உள்ளே போகவில்லை, என் முகத்திலே முழித்துவிட்டு ஆபீஸ்க்கு போக வேண்டாம் என்று அதிர்ஷ்டம் இல்லாத போல் ஈஸ்வரி, பாக்கியவிடம் பேசுகிறார்.
அத்துடன் நீயும் இனி ஹோட்டலுக்கு போகும் பொழுது என்னிடம் சொல்லிட்டு போக வேண்டாம். ஜெனி இடம் சொன்னால் போதும் என்று சொல்லி கதவை அடைத்து விடுகிறார். இதனை தொடர்ந்து செழியன் எங்கே போவது என்று தெரியாமல் நடுரோட்டில் நின்று கொண்டு எழிலுக்கு போன் பண்ணி வர வைக்கிறார். எழில் வந்ததும் வேலை போன விஷயத்தையும் அம்மாவுக்கு இதனால்தான் என்னால் உதவ முடியவில்லை.
நான் சுயநலமாக யோசித்து விட்டேன் என்று பேசுகிறார். இதை கேட்டதும் எழில், என்னாலையும் அம்மாவுக்கு உதவ முடியவில்லை என்று எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது என இருவரும் பேசிக் கொள்கிறார்கள். இதை பார்த்த கோபி இவர்களிடம் எதுவும் பேசாமல் ஹோட்டலுக்கு போய் விடுகிறார். பிறகு அங்க வந்து செழியன் இடம், உனக்கு வேலை போன விஷயம் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியுமா என்று கேட்கிறார்.
அதற்கு செழியன் நான் இன்னும் யாரிடமும் சொல்லவில்லை என்று சொல்கிறார். இப்போதைக்கு சொல்ல வேண்டாம் இல்லையென்றால் உங்க அம்மா தேவையில்லாமல் பாடம் எடுப்பார். அதனால் நீ யாரிடமும் சொல்ல வேண்டாம் உனக்கும் எழிலுக்கும் நான் கூடவே இருந்து எல்லா உதவியும் பண்ணுவேன் என்று சொல்லி பாக்யா கிட்ட நெருங்க முடியாத அளவிற்கு செழியனை கண்ட்ரோலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கோபி கொண்டு வருகிறார்.
கடைசியில் கோபி நினைத்தபடி செழியினை தன் கைக்குள் வைத்த பிறகு அதன் மூலம் பாக்யாவிற்கு பிரச்சினை கொடுக்க ஸ்கெட்ச் போட்டுவிட்டார். அடுத்ததாக இனியா சேர்ந்திருக்கும் டான்ஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதற்காக தனிப்பட்ட ஒரு டான்ஸ் மாஸ்டர் வேணும் என்று கல்லூரியில் இருந்து சொல்லி விட்டார்கள். அதனால் இனியாவிற்கு டான்ஸ் மாஸ்டராக வரக்கூடிய நபரால் புதுவிதமாக பிரச்சனை வரப் போகிறது.