வெள்ளிக்கிழமை, அக்டோபர் 25, 2024

பெண்கள் அணிக்கு கிடைத்த நாமினேஷன் ஃப்ரீ பாஸ்.. இந்த வாரம் எஸ்கேப் ஆனது இவரா.?

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் பயன்படுத்தி யாராவது தப்பித்து விடுகின்றனர். அப்படித்தான் இந்த வாரத்திற்கான நாமினேசன் ஃப்ரீ பாஸ் டாஸ்க் நடைபெற்றிருக்கிறது.

அது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி ஆண்கள் அணி பெண்கள் அணி இருவரும் பிரிந்து இந்த விளையாட்டை விளையாடுகின்றனர்.

அதன்படி கயிற்றின் மூலம் பந்தை எடுத்து வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் குடுவைக்குள் போட வேண்டும். பார்ப்பதற்கு சுலபமாக தெரிந்தாலும் இது கொஞ்சம் கஷ்டமான டாஸ்க் தான். இருந்தாலும் இரு அணிகளும் பொறுமையாக பந்தை குடுவைக்குள் போட முயற்சி செய்கின்றனர்.

கேர்ள்ஸ் அணிக்கு கிடைத்த பாஸ்

இதில் ஆண்கள் அணி சில இடங்களில் சொதப்புகிறது. பெண்கள் அணியை பொறுத்தவரையில் பவித்ராவின் யுக்தி சிறப்பாக கை கொடுத்துள்ளது. அதன்படி தற்போது இந்த பாஸை கேர்ள்ஸ் டீம் கைப்பற்றி இருக்கிறது.

இதை வைத்து நாமினேஷனில் இருந்து ஒருவர் காப்பாற்றப்படலாம். அந்த வகையில் கேர்ள்ஸ் அணியை பொருத்தவரையில் பவித்ரா, தர்ஷா குப்தா, அன்ஷிதா, ஜாக்லின், சௌந்தர்யா ஆகியோர் இந்த வாரம் நாமினேஷனில் இருக்கின்றனர்.

இதில் பவித்ராவை தான் பெண்கள் அணி தேர்ந்தெடுத்துள்ளது. அதன்படி இந்த வாரம் அவர் கிரே எஸ்கேப் ஆகி இருக்கிறார். இருப்பினும் ஓட்டிங் நிலவரம் பொறுத்த வரையில் தர்ஷா குப்தா அன்ஷிதா இருவரும் தான் கடைசி நிலையில் இருக்கின்றனர்.

இவர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் இந்த பாஸ் உபயோகமாக இருந்திருக்கும். எது எப்படியோ இதை வைத்து பார்க்கும் போது செல்லம்மா சீரியலின் ஹீரோயின் இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News