செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

சூப்பர் ஸ்டார் பட்டமே வேண்டாம்.. கங்குவா ரிலீஸுக்குப் பின் நம்ம சூர்யா மார்க்கெட் சூடு பிடிக்குமா?

சூப்பர் ஸ்டார் என அழைத்ததற்கு சூர்யா கியூட்டான பதில் அளித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

மெகா பட்ஜெட்டில் உருவாகிள்ள கங்குவா

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள படம் கங்குவா. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல், ஆராஷ் ஷா, ரெடிங் கிங்ஸ்லி, யோகிபாபு, நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 38 மொழிகளில் 3 டி தொழில்நுட்பத்தில் அதிக தியேட்டர்களில் வரும் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸாகும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யுவி கிரியேசன்ஸ் தயாரித்துள்ளது.

ரூ.350 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் சூர்யாவின் கேரியரில் அதிக பட்ஜெட் படமாக உருவாகியுள்ள நிலையில் இப்படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர், டீசர், டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்ட்டான நிலையில் சமீபத்தில் இப்படத்தின் 2 வது சிங்கிலான யோலோ பாடம் வெளியாகி சர்ச்சைக்குள்ளான நிலையிலும் வைரலானது.

இப்படம் ரிலீஸூக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரமோசனில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்தை எப்படியும் ரூ.500 கோடிக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இப்படம் ரூ.2000 கோடி வசூலிக்கும், ஜிஎஸ்டி பில்லுடன் சமூக வலைதளத்தில் பகிர்கிறேன் என்று ஞானவேல்ராஜா கூறியது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

சூர்யாவுக்கு இப்படம்தான் வெற்றியைத் தீர்மானிக்குமா?

அதேசமயம், சூர்யாவுக்கு இப்படம்தான் வெற்றியைத் தீர்மானிக்குமா? என்ற கேள்வியை சினிமா விமர்சகர்கள் எழுப்பி வருகின்றனர். ஏனென்றால் தியேட்டரில் ரிலீஸாகி வெற்றி பெற்ற சூர்யாவின் படங்களில் கடந்த 10 ஆண்டுகளில் எதுவுமில்லை என சினிமா விமர்சகர்கள் கூறிய நிலையில் தன் மார்க்கெட்டை நிலைநிறுத்த சூர்யாவும் கங்குவாவை தான் நம்பியிருக்கிறார் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில் வரலாற்றுப் பின்னணியில் நவீன காலத்தில் நடக்கும் சம்பவங்களை பிணைத்து இப்படத்தை சிறுத்தை சிவா உருவாக்கியுள்ள நிலையில், இப்படத்தைப் பார்த்த கரண் ஜோகர், மதன் கார்க்கி, விவேகா உள்ளிட்டோர் விமர்சனம் தெரிவித்து, இப்படம் பெரிய சாதனை படைக்கும் என்று கூறியிருந்தனர். அதனால் நாள் நெருங்க நெருங்க இப்படத்தை பார்க்கும் ஆவலும் கூடி வருகிறது.

சூப்பர் ஸ்டார் பட்டத்தை நிராகரித்த சூர்யா

ஒரு படத்தின் வெற்றிக்கு புரமோசனும் முக்கிய காரணம் என்பதால் கங்குவா படக்குழு அதைச் செய்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யாவை சூப்பர் ஸ்டார் என நிகழ்ச்சித் தொகுப்பாளர் அழைக்க, உடனடியாக சூர்யா, சூப்பர் ஸ்டார் எப்போதுமே ரஜினி சார் மட்டுமே. அவர் ஒருவரே சூப்பர் ஸ்டார்.அவருடைய பெயரை எடுத்துக் கொண்டு நான் எப்படி பேட்ஜ் போன்று அணிவது? என்று கூறியிருந்தார்.

இப்போது மட்டுமல்ல, தன்னை எப்போது யார் சூப்பர் ஸ்டார் என அழைத்தாலும் அதை சூர்யா ஏற்றது கிடையாது. சூர்யவின் இந்தப் பக்குவத்தை அவரது ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் அயன், கஜினி, காக்க காக்க, வேல், சிங்கம் என வரிசையாக வெற்றிப் படங்கள் கொடுத்து வந்தார் சூர்யா.

சூர்யாவின் மார்க்கெட் சூடுபிடிக்கும்

அதை தொடர்ந்து கொண்டிருந்தால், விஜய், அஜித்திற்குப் போட்டியாக வந்திருக்கலாம் எனவும் சூப்பர் ஸ்டார் பட்டமும் அவரை தேடி வந்திருக்கும் எனவும் இடையில் சில படங்கள் சொதப்பியதால் தான் அவர் மார்க்கெட் டல்லடிக்க காரணம், ஆனால் கங்குவா படத்தின் வெற்றிக்குப் பின் சூர்யாவின் மார்க்கெட் சூடுபிடிக்கும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News