Lokesh Kanagaraj : மோஸ்ட் வான்டெட் இயக்குனராக வலம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். விஜய்யின் லியோ படத்திற்கு பிறகு இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கூலி படத்தை எடுத்து வருகிறார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது. லோக்கேஷின் லயன் அப்பில் இருக்கும் படம் தான் கைதி 2. இந்நிலையில் இன்றுடன் கைதி படம் வெளியாகி கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகிறது.
இதை நினைவு கூர்ந்து லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதாவது தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு மற்றும் கார்த்தி இருவருக்கும் தனது நன்றியை லோகேஷ் கூறியிருக்கிறார். மேலும் டில்லி விரைவில் வருவார் என்றும் ட்வீட் செய்துள்ளார்.
லோகேஷ் கொடுத்த அப்டேட்
கைதி 2 படம் லோகேஷ் யுனிவர்சில் தான் வருகிறது. இதில் இதுவரை லோகேஷ் படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் வர இருக்கிறது. குறிப்பாக சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் கைதி 2வில் வர இருக்கிறது. சூர்யா மற்றும் கார்த்தி இருவரையும் ஒரே திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
அதுவும் இந்த படமும் போதை பொருள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் எடுக்க உள்ளார் லோகேஷ். கார்த்தியின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக இருந்த கைதி படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக பெரிய அளவில் பேசப்படும்.
அதற்காக இப்போது கார்த்தி ஆயத்தமாகி கொண்டிருக்கிறார். கார்த்தி தற்போது சர்தார் 2 படபிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இப்படம் முடிந்தவுடன் உடனடியாகவே கைதி 2 படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்தச் செய்தி கார்த்திக் மற்றும் லோகேஷ் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.