
பிரேம் ஜாக்கோப் வெள்ளிதிரையில் படங்களில் நடித்து வரும் சுவாசிக்காவை அக்டோபரில் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இந்த வருடம் கோலாகலமாக தல தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரில் நடித்து வரும் அவினாஷ் தனது நீண்ட நாள் காதலியான தெரசா மரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி ℅ ராணி சீரியலில் நடித்து வரும் அர்ஜுன் தன்னுடைய காதலியை கரம்பிடித்தார். அவர்களும் இந்த ஆண்டு தல தீபாவளி கொண்டாடுகின்றனர்.

சின்னத்திரை தொலைக்காட்சிகளின் தொகுப்பாளராக பணியாற்றி வந்த அஸ்வந்த் பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் பிரபலமான கண்மணி மனோகரனை இந்த வருடம் கரம் பிடித்தார்.

நாதஸ்வரம் தொடரின் மூலம் பிரபலமான ஸ்ருதிஹா சின்னத்திரை நடிகர் எஸ் எஸ் ஆரியனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இது தல தீபாவளி.

சின்னத்திரை நடிகை மட்டும் அல்லாமல் மருத்துவராக இருக்கும் தர்ஷனா அசோகன் தன்னுடைய காதலன் அபிஷேக்-கை ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த அபிஷேக் ராஜா தனது தோழி திவ்யாவை திருமணம் செய்து கொண்டார். ஜூன் மாதம் இவர்களது திருமணம் நடந்த நிலையில் இப்போது தல தீபாவளி கொண்டாடுகின்றனர்.

அன்பே வா தொடரில் ஹீரோவாக நடித்து வரும் விராட் மேக் அப் ஆர்டிஸ்ட் ஆன நவீனாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது.

சின்னத்திரை நடிகை சந்தியா, நடன இயக்குனர் சாந்தியின் மகன் முரளி கிருஷ்ணாவை இந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இந்த தீபாவளியை தல தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.

திருமகள் தொடரில் வில்லியாக நடித்து வரும் நிவேத்திதாவை அந்த தொடரின் ஹீரோ சுரேந்தர் திருமணம் செய்து கொண்டார். இது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

ஹரிகா சாது சின்னத்திரை நடிகர் அரவிஷை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர் இந்த வருடம் தல தீபாவளி கொண்டாடுகின்றனர்.