சனிக்கிழமை, அக்டோபர் 26, 2024

விஜய் மாநாட்டில் இருந்து மக்களை திசை திருப்ப சன் டிவி போட்ட பலே திட்டம்.. நாளைக்கு என்ன படம் தெரியுமா?

Tamilaga Vettri Kazhagam: நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடக்க 24 மணி நேரத்திற்கும் குறைவாகத்தான் இருக்கிறது. விஜய் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் விஜய் என்ன செய்யப் போகிறார் என ஆவலுடன் காத்துக் கிடக்கிறார்கள்.

நாளைக்கு இந்நேரம் கிளம்பி எங்க போறது என்று இன்னைக்கே விக்கிரவாண்டிப்பாக்கம் நடையை கட்டி விட்டார்கள் தளபதியின் விழுதுகள். ஒட்டுமொத்த தமிழகமும் இப்போதே விக்கிரவாண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

நாளைக்கு என்ன படம் தெரியுமா?

எங்கு பார்த்தாலும் விக்கிரவாண்டியில் மக்கள் தலைகள் தான் சூழ்ந்து கிடக்கிறது. போக்குவரத்து நெரிசலும், மக்கள் கூட்டமும் விக்கிரவாண்டி பக்கம் சுனாமியே வந்தது போல் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் நாளை செய்தி சேனல்கள் மொத்தமும் விஜய் மாநாட்டு நிகழ்ச்சியை தான் லைவாக ஒளிபரப்புவார்கள்.

அது மட்டுமில்லாமல் இந்த மாநாட்டில் விஜய் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேச இருக்கிறார். நாளை மதியம் மூன்று மணியிலிருந்து சூடு பிடிக்க ஆரம்பித்து விடும். மக்களும் செய்தி சேனலை ஆன் செய்துவிட்டு டிவி முன்னாடி உட்கார்ந்து விடுவார்கள்.

ஆனால் இந்த நேரத்தை ஈசியாக விட்டு விடுவார்களா சன் டிவி காரர்கள். மக்களை திசை திருப்ப பலே திட்டத்தை போட்டு விட்டார்கள். அதாவது நாளை ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் முதலில் முத்து படம் தான் ஒளிபரப்பப்பட இருந்தது.

ஆனால் தற்போது மொத்த திட்டத்தையும் மாற்றி விட்டார்கள். நாளை சன் டிவியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் போடப் போகிறார்கள். கண்டிப்பாக இந்த படம் பெண்கள் மற்றும் குழந்தைகளை திசை திருப்பி விடும்.

செய்தி சேனலில் லைவ் பார்ப்பதற்கு பதிலாக கூலாக தலைவர் படத்தை பார்க்கவும் பலருக்கும் எண்ணம் வரலாம். இதை சரியாக புரிந்து கொண்டு தளபதியின் மாநாட்டிற்கு கட்டம் கட்டி இருக்கிறார்கள். எது எப்படியோ விடியும் நாள் தளபதி ஆனது என ஒட்டுமொத்த தமிழகமும் காத்திருப்பது உறுதி.

- Advertisement -spot_img

Trending News