சனிக்கிழமை, அக்டோபர் 26, 2024

டாப் ஹீரோயின் டூ தொழிலதிபரின் மனைவி.. அடேங்கப்பா! அசினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Asin net worth: நடிகை அசின், தமிழ் சினிமா ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத பெயர். போட்டிக்கு ஆளே இல்லை என த்ரிஷா மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது, சட்டென உள்ளே வந்து விரல் சொடுக்கும் நேரத்தில் டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து நம்பர் ஒன் ஹீரோயின் ஆக இருந்தார்.

போக்கிரி படத்திற்கு பிறகு த்ரிஷா இல்லை, அசின் தான் தமிழ்நாட்டின் கனவுக்கன்னி என இளைஞர்கள் ஏங்க ஆரம்பித்தார்கள். ஜெயம் ரவியுடன் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, விஜய்யுடன் போக்கிரி மற்றும் சிவகாசி, காவலன், அஜித்துடன் ஆழ்வார் மற்றும் வரலாறு, சூர்யாவுடன் கஜினி மற்றும் வேல் என தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களின் வாய் புரம் அசினை தேடி வந்தது.

அசினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அது மட்டுமில்லாமல் இந்தி திரை உலகிலும் சில வருடங்கள் வளர்ந்து வரும் ஹீரோயின் ஆக வரவேற்பை பெற்றார். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி கொண்டாலும் அசினை கொண்டாடாத தமிழ் சினிமா ரசிகர்களை இல்லை என்று சொல்லலாம்.

இன்று, தன்னுடைய 38வது பிறந்த நாளை கொண்டாடும் அசினின் சொத்து மதிப்பு தலையை சுற்ற வைக்கும் அளவுக்கு இருக்கிறது. அசின் மட்டுமே சம்பாதித்த சொத்து 117 கோடியாகும். மேலும் ஆடி க்யூ 7, பென்ஸ் போன்ற சொகுசு கார்களும் அசினுக்கு சொந்தமாக இருக்கிறது.

கஜினி படத்தில் ரீலாக இருந்தது, அவருடைய சொந்த வாழ்க்கையிலும் நடந்தது. ஏர் வாய்ஸ் ஓனர் சஞ்சய் ராமசாமியை காதலிப்பது போல் அந்த படத்தில் இருக்கும். அசின் தன்னுடைய நிஜ வாழ்க்கையில் மைக்ரோ மேக்ஸ் செல்போனின் நிறுவனர் ராகுல் என்பவரை தான் அசின் திருமணம் செய்து இருக்கிறார்.

தனது தந்தையிடம் மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கி நண்பர்களுடன் சேர்ந்து மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்த ராகுல் ஷர்மா இன்று 1300 கோடிக்கு அதிபதி. மேலும் இவரிடம் பென்ட்லி சூப்பர்ஸ்போர்ட் லிமிடெட் எடிஷன், பிஎம்டபிள்யூ எக்ஸ்6, மெர்சிடிஸ் ஜிஎல்450 மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் 2 போன்ற சொகுசு கார்களும் இருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News