TVK’s convention: முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த விஜய் அவருடைய தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக இன்று விக்ரவாண்டியில் முதல் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டுக்கு கிட்டத்தட்ட 50,000 மேல் வந்து கலந்து கொள்ளும்படி இருக்கையுடன் கூடிய திடல் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு நேற்றிலிருந்து ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பலரும் வந்து கொண்டே இருக்கிறார்கள்.
இதற்காக சுமார் 85 ஏக்கர் பரப்பளவில் ஒவ்வொருவரும் அமர்வதற்கு தனிப்பட்ட முறையில் சேர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இதில் கலந்து கொள்ள வருபவர்கள் எந்தவித கூட்டம் நெரிசலிலும் சிக்கிட கூடாது என்பதற்காக உள்ளே வருவதற்கு ஐந்து வாசல்களும், வெளியே செல்வதற்கு 15 வழிகளும் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அத்துடன் மாநாட்டுக்கு வரும் வாகனங்களை பார்க்கிங் செய்வதிலும் எந்தவித பிரச்சினை வந்து விடக்கூடாது என்பதற்காக சென்னை முதல் திருச்சி வரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பிரம்மாண்ட வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் கிட்டத்தட்ட 5000க்கும் மேல் வாகனங்களை நிறுத்த முடியும். அத்துடன் இதில் கலந்து கொள்ளும் மக்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் சாப்பாட்டு வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது.
ஆனாலும் இந்த நிகழ்ச்சி மதியம் 3 மணிக்கு தொடங்க இருப்பதால் அதற்கு முன் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கூட்டம் கூடி அங்கே வந்திருப்பதால் கட்டுக்கடங்காத கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பலரும் திணறி கொண்டு வருகிறார்கள். அதிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 80க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்து அந்தப் பகுதியை கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால் அங்கே இருக்கும் மருத்துவர்கள் உடனே மயங்கி விழுந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக அங்கிருந்து கூட்டிட்டு போயி முதல் உதவி அளித்து வருகிறார்கள். ஆனால் இந்த கூட்டத்திற்கு இவ்வளவு பேர் வருவார்கள் என்று யூகித்ததை விட அதிகமான மக்கள் கடல் போல் திரண்டு வருவதால் ஏகப்பட்ட சலசலப்புகளும், சமாளிக்க முடியாமல் சர்ச்சையும் நிலவி வருகிறது.