திங்கட்கிழமை, அக்டோபர் 28, 2024

விஜய்க்கு ரஜினி போட்ட போன் கால்.. தவெக அரசியலில் அடுத்த பரபரப்பு

சூப்பர் ஸ்டார ரஜினிகாந்த் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்துக் கூறியதாக தகவல் வெளியாகிறது.

பிரமாண்டத்தை காட்டிய தமிழக வெற்றிக் கழகம்

இந்த ஆண்டில் ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்திருந்த ஒரு நிகழ்வாக இருந்தது தமிழக வெற்றிக் கழகத்தின் நேற்றைய வெற்றித் திருவிழா மாநாடு. சினிமாத்துறைனர், விஜய் ரசிகர்கள் என்பதைத்தாண்டி, அனைவரின் எதிர்பார்ப்பாக புதிய ஒருவரின் அரசியல் வருகை இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தவராகவே விஜய் தன்னைக் காட்டிக் கொண்டார். அதன்படியே. விஜய்யின் ஒவ்வொரு அடியும் பேச்சும் அமைந்தது.

திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தான் அரசியலுக்கு வருவதாக முதலில் விஜய் அறிவிக்கவில்லை என்பது அவரது சினிமா தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய வகையில் அமையலாம் என்பதால் அவரது கடைசி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது மட்டும் அதை நேற்றைய முதல் மாநாட்டின் மேடைப் பேச்சில் தெரிவித்திருப்பதாகவும் சமூக வலைதளங்களில் ட்ரோல்கள் செய்யப்பட்டு வருகிறது.

இருப்பினும் திட்டமிட்டபடி, தனிப்பட்ட முறையில் தொண்டர்களுக்கு குவாட்டரும், கோழிப்பிரியாணியும் கைச் செலவுக்கு ரூ.200 பணமும் கொடுக்காமல் முதல் மாநாட்டிற்கே 10 லட்சம் தொண்டர்களை அழைத்திருப்பது பெரும் சாதனைதான். அதனை விஜய்யின் சினிமா முகமும், அவருக்கென இருக்கும் ரத்தத்தின் ரத்தமான ரசிகர்களும் நிகழ்த்திக் காட்டி திராவிட கட்சிகளுக்கு கொஞ்சம் திகிலை ஏற்படுத்தியிருக்கலாம்.

ஏனென்றால் இதை ஒரு ஜாதிக் கட்சிக்கான கூட்டமாக மக்கள் பார்க்கவில்லை. புதியவர் அரசியலில் மக்களின் பலமான ஆதரவோடு வந்திருப்பதாகவும், விஜய் நேற்று மாநாட்டில் பேசிய மாதிரி குடும்ப அரசியல், பெரும்பான்மை சிறும்பான்மை சொல்லி மக்களை பிரிக்கப் பார்க்கிறார்கள் என்பதையும் மக்கள் நீண்ட காலமாக புரிந்து வைத்திருந்தாலும், அதை நேற்றைய விஜய் பேச்சில் இன்னும் தெளியாக புரிந்திருக்கலாம்.

விஜய் ரசிகர்கள் கை வைக்காத இடமே இல்லை அரசியலில் எப்படி?

ஆனால், சினிமாவில் அரசியல் வசனம் பேசுவதைப் போன்று விஜய் நீளமாக பேசியது விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் விஜய்யின் ரசிகர்கள் கை வைக்காத இடமே இல்லை. சூர்யா, அஜித், ரஜினி, சிவகார்த்திகேயன் என சினிமா வட்டாரத்திலேயே பல எதிரிகள் உண்டு என்பதைப் போல் சமூக வலைதளங்களில் அவர்கள் செய்த செயல்கள் எல்லோருக்கும் தெரியும்.

அப்படியிருக்க, விஜய்யின் மாற்றத்திற்கான அரசியலை அவர் வழிமொழிந்து செயல்படுத்த ஆரம்பித்திருப்பதை எல்லோரும் வரவேற்பவர்களாக இருந்தாலும், அவர்கள் இனிமேல் செய்யும் செயல், பேசும் வார்த்தைகள், கொள்கையில் முரண்பாடின்றி செயல்படும் விதம் இதெல்லாம் வைத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வரும் தேர்தலில் ஓட்டு வங்கியை எளிதாகப் பெறவாய்ப்புண்டு.

விஜய்க்கு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்?

இருப்பினும், விஜயகாந்திற்குப் பிறகு திராவிட கட்சிகளை கடுமையாக விமர்சித்து, 10 லட்சம் பேரை திரட்டி தன் முதல் மாநாட்டிலேயே பெரிய கட்சிகளை எல்லாம் அலறவிட்டு சொன்னதை செய்துகாட்டிய விஜய்க்கு சினிமாத்துறையில் இருந்து பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், நேற்று பிரமாண்டமாக மாநாட்டை நடத்தி, ஒரு தேர்ந்த அரசியல்வாதி மாதிரியி மேடையில் பேசி திராவிட கட்சிகளை கடுமையாக விமர்சித்து, தொண்டர்களின் கரகோஷத்தைப் பெற்று, மக்களின் மனதிலும் இடம்பிடித்த தவெக தலைவர் விஜயை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அழைத்து வாழ்த்துகள் கூறி பாராட்டியதாக தகவல் வெளியாகின்றது.

ரஜிகாந்த் 30 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக இழுத்தடித்து, 2017 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்து, அதன் பின் கட்சி ஆரம்பிக்க சில ஆலோசனைகளை மேற்கொண்டு அதிலிருந்து பின்வாங்கினார். கமல் அரசியலில் குதித்தாலும் அவர் தான் குற்றம்ச்சாட்டிய அதே திராவிட கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார். ஆனால் ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோரிடம் இருந்து வேறுபட்டு, விஜய் தன் 50 வயதில் சொன்னதை செய்துகாட்டிய தன்னை நிரூபித்து அவரின் அரசியல் பயணம் எப்படிப் போகும் என்பதை பொருந்திருந்து பார்க்கலாம் என அரசியல் விமர்சகர்கள் குறி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News