வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

அவ்ளோ கெஞ்சியும் இரக்கம் காட்டுனிங்களா கல்நெஞ்சக்காரிகளா.. 6 பேர் கொண்ட குழுவை வச்சு செஞ்ச தலைவி தர்ஷா

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது எவிக்ஷன் நடந்துள்ளது. ரவீந்தர், அர்ணவ் வெளியேற்றத்தை தொடர்ந்து நேற்று தர்ஷா குப்தா குறைவான ஓட்டுகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இது எதிர்பார்த்தது தான் என்றாலும் மேடைக்கு வந்த பிறகு அவர் பேசியது நிச்சயம் எதிர்பாராதது தான். ஏற்கனவே பெண்கள் அணி மீது கொஞ்சம் கோபத்துடன் இருந்த அவர் நேரம் கிடைத்ததும் ஒட்டுமொத்தமாக ரோஸ்ட் செய்து பார்வையாளர்களின் கைத்தட்டலை அள்ளி இருக்கிறார்.

அதாவது பெண்கள் அணியில் ஒரு குரூப் இருக்கிறது. அங்கு அவர்கள் வைத்தது தான் சட்டம். இது ஏற்கனவே ஒரு விமர்சனம் ஆகி வருகிறது. அதை தர்ஷா குப்தா மேடையில் ஆறு பேர் கொண்ட குழு என போட்டு உடைத்து விட்டார்.

அதிலும் அந்த குரூப்பில் ஜாக்லின் சுனிதா இருவரும் வெளியேறி விட்டாலே மொத்த சோலியும் முடிஞ்சுச்சு. நாமினேஷன் ஃப்ரீ பாஸ் வேணும்னு கெஞ்சினேன் கதறினேன் இரக்கம் காட்டுனிங்களா என மனதில் இருப்பதை போட்டு உடைத்திருக்கிறார்.

மேலும் நீங்க எல்லாரும் அடுத்தடுத்து வெளியில வரத்தான் போறீங்க. நானும் அத பார்க்க தான் போறேன் என சிரிச்சபடியே ஊமை குத்தாக குத்தி விட்டார். இதற்கு பெண்கள் அணியும் சிரித்து கைதட்டி ரியாக்ட் செய்தார்கள். ஆனால் உள்ளுக்குள் நிச்சயம் ஒரு கொந்தளிப்பு இருக்கும்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தர்ஷா

ஆனால் ஆண்கள் அணி தர்ஷா பேச ஆரம்பித்ததில் தொடங்கி முடியும் வரை விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஆடியன்ஸ் நிலைமையும் அதேதான். துக்கம் தொண்டையை அடைத்தாலும் அதை நகைச்சுவையாக அவர் மாற்றியது ரசிக்கும் வகையில் தான் இருந்தது.

இதை பார்த்த தர்ஷாவின் ரசிகர்கள் எங்கள் தலைவி வேற லெவல். இனி கேர்ள்ஸ் டீம் அடுத்தடுத்து வெளியேறுவார்கள் என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

Trending News