Dharsha Gupta: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று தர்ஷா குப்தா எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். மூன்று வாரங்கள் வீட்டுக்குள் இருந்த இவர் செய்த சம்பவம் என்று பார்த்தால் சொல்லிக் கொள்ளும் படியாக எதுவும் இல்லை.
சில பல நேரங்களில் இரண்டு அணிகளையும் எரிச்சல் படுத்தியது தான் இவருடைய வெளியேற்றத்துக்கு ஒரு காரணமாக இருக்கிறது. சமையலில் சொதப்புவதில் இருந்து தேவையில்லாமல் பேசுவது அழுவது என எரிச்சலூட்டும் நபராகவே இருந்தார்.
இதில் ஆண்கள் அணி வெளிப்படையாகவே இவரை வெளியேற்ற பிளான் போட வேண்டும் என கூறியிருந்தார்கள். அதேபோல் பெண்கள் அணி கூட இவரை தங்கள் குரூப்பில் ஒருவராக சேர்த்துக் கொள்ளவும் இல்லை மதிக்கவும் இல்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷா குப்தா வாங்கிய சம்பளம்
அதனாலேயே கடந்த வாரம் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் வேண்டும் என இவர் கேட்ட போது கூட யாரும் கண்டு கொள்ளவில்லை. இப்படி பல விமர்சனங்களை கடந்து பிக்பாஸ் வீட்டை விட்டு அவர் வெளியேறியிருக்கிறார்.
ஆனால் போகும்போது தலைவி சும்மா போகவில்லை. முடிந்த அளவு பெண்கள் அணியை ரோஸ்ட் செய்துவிட்டு தான் கிளம்பினார் அவர் பேசியதில் ஒரு நியாயமும் இருந்தது. இப்படியாக பிக்பாஸில் தன்னுடைய பயணத்தை அவர் முடித்துக் கொண்டுள்ளார்.
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக இவருக்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டிருந்தது. இவர் வீட்டில் 20 நாட்கள் வரை இருந்துள்ளார். அதை கணக்கிட்டு பார்க்கும் போது இவருடைய மொத்த சம்பளம் 5 லட்சமாக இருக்கிறது.
உண்மையில் இது அவருக்கான நல்ல சம்பாத்தியம் தான். தற்போது வீட்டை விட்டு வெளியில் வந்திருக்கும் அவர் விரைவில் சோசியல் மீடியா சேனல்களுக்கு பேட்டி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் கேர்ள்ஸ் அணியின் வண்டவாளம் வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.