புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

பாண்டியனிடம் மாமியாரை காப்பாற்றிய தங்கமயில், தடுமாறும் மீனா.. ராஜியை சமாதானப்படுத்தி அரவணைத்த கதிர்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியனுக்கு தெரியாமல் அம்மாவையும் ராஜியையும் அப்பத்தாவை பார்ப்பதற்கு ஹாஸ்பிடலுக்கு கதிர் கூட்டிட்டு வந்து விடுகிறார். கோமதி பார்த்த சந்தோஷத்தில் அப்பத்தா ஆனந்த கண்ணீர் வடித்து செண்டிமெண்டாக பேசி பாசத்தை கொட்டுகிறார். அதை மாதிரி ராஜியும் அப்பத்தாவிடம் பேசிவிட்டு அம்மா பாசத்தில் வடிவியிடம் பேசுகிறார்.

ஆனால் வடிவு, ராஜிடம் பேசாமல் கோபத்தைக் காட்டும் விதமாக அமைதியாகி போய் விடுகிறார். இதனால் அம்மாவிடம் பேசு என்று கெஞ்சும் ராஜியை கடைசிவரை வடிவு மன்னிப்பதாக இல்லை. கடைசியில் ராஜி அழுது கொண்டே ரூம் விட்டு வெளிவந்து ஃபீல் பண்ணி அழுகிறார். உடனே பின்னாடி வந்து கதிர், அம்மா உன்னிடம் பேசாமல் தான் இருந்தாங்களே தவிர உன்னை வெளியே போய் என்று சொல்லவே இல்லை.

கொஞ்சம் அவங்களுக்கு வருத்தம் இருக்க தான் செய்யும் அதற்காக இப்பொழுது நீ அழுது என்ன பிரயோஜனம் என்று ராஜியை சமாதானப்படுத்தி அன்பாக பேச அரவணைக்கிறார். அடுத்ததாக பழனிச்சாமி, குமரவேலுவை மாப்பிள்ளை பார்க்க பொண்ணு வீட்டில் இருந்து வராங்க என்று பொய் சொல்லி வீட்டில் சமாளித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் நேரமாக இன்னும் வரவில்லை என்று சக்திவேல், பழனிச்சாமி இடம் கேள்வியா கேட்டுக்கொள்கிறார்.

உடனே பழனிச்சாமி, கதிருக்கு போன் பண்ணி ஜாடை மழையாக பேசி இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதை தெரியப்படுத்துகிறார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டிற்கு வந்து விடுகிறார். ஆனால் மாமாவிடமிருந்து இதை சமாளித்து ஆக வேண்டும் என்று மீனா, தங்கமயில் இடம் சொல்கிறார். ஆனால் நீங்கள் சும்மாவே எல்லா விஷயத்தையும் உளறி விட்டுவிடுவீர்கள்.

அதே மாதிரி இந்த விஷயத்திலும் உளறி விட்டால் தேவையில்லாமல் பிரச்சனை வரும் அதனால் நீங்கள் அமைதியாகவே இருங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று மீனா சொல்லிவிட்டார். பிறகு வீட்டிற்கு வந்த பாண்டியன், கோமதி எங்கே என்று நாலா பக்கம் தேடுகிறார். கடைசியில் மீனாவிடம் அத்தை எங்கே என்று கேட்கும் பொழுது மீனா உண்மையை சொல்ல முடியாமல் பொய்யும் சொல்ல முடியாமல் தடுமாறுகிறார்.

அந்த நேரத்தில் தங்கமயில், மாமியாரை காப்பாற்றும் விதமாக கோவிலுக்கு போயிருக்கிறார்கள் என்று பொய் சொல்லி பாண்டியன் இடம் சமாளித்து விடுகிறார். ஆனாலும் இந்த உண்மை வெளிவந்த பிறகு ஆர்ப்பாட்டம் பண்ண சக்திவேல் மற்றும் முத்துவேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாண்டியன் மனைவிக்கு சப்போர்ட்டாக பேசி அவர்கள் மூஞ்சியில் கரியை பூச போகிறார்.

- Advertisement -spot_img

Trending News