இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் புதிய விதியை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இனிமேல் ஓடிபி குறுஞ்செய்திகள் வராது என அறிவித்துள்ளது பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவீன உலகின் அறியல், தொழில்நுட்பம், விஞ்ஞானத்தில் நாம் தொடர்ந்து முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம். இதில் நாளும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதைப் பயன்படுத்தி யாரும் மோசடியில் ஏமாற்றக் கூடாது என்பதற்காக சில பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
OTP – ஒன் டைம் பாஸ்வேர்ட்
இந்த நிலையில், ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்ய ஓடிபி எனப்படும் ஒன் டைம் பாஸ்வேர்ட் முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது வங்கிப் பரிவர்தனைகள், அமேசானில் பொருள் வாங்குவது, தொலைத்தொடர்பு சேவைகள், டாக்சி புக் செய்வது இதெல்லாவற்றிற்கும் ஓடிபி பாதுகாப்பாக அம்சமாக கருதப்படுகிறது.
உரிய சேவை குறிப்பிட்ட நபருக்கு மட்டும் போய் சேரவும், அதன் தகவல் மற்றும் பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு இந்த ஓடிபி சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் இந்த ஓடிபி சேவையைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என டெலிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓடிபி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் டிராய் ஒரு புதியை அறிமுகம் செய்தது. அதன்படி, ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட அந்த விதியில், அனைத்து ஓபிடி குறுஞ்செய்திகளையும் டிராய் கண்காணிக்கும். அப்படி டிராக் செய்யப்பட்ட ஓடிபிகள் அங்கீகாரம் பெறாத நிறுவனங்களிடம் இருந்து பயனர்களுக்கு வந்தால் அது தடுத்து நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த முறையால் பயனர்களால் அந்த ஓடிபி எண்களைப் பார்க்க முடியாது எனவும், வங்கிப் பரிவர்த்தனை, டெலிவரி அப்டேட்கள், பணப் பரிமாற்ற எச்சரிக்கை மெசேஜ் உள்ளிட்ட அனைத்திற்கும் ஓடிபி பாதுகாப்பானதாகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கும் நிலையில் இந்த ஓடிபிகளை டெலிமார்க்கெட்டிங் மூலமாகத்தான் பயனர்களுக்கு அனுப்புகிறது.
இந்த நிலையில் அந்த டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் வங்கியால் அங்கீகரிக்கப்படாத நிலையில், அதன் மெசேஜ்கள் தடைபடும். இந்த நிலையில், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுடன் தொடர்பு வைத்திருப்பதால், இந்த ஓடிபி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் இதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.