ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

தவெகவில் இணைந்த சூட்டோடு விலகிய இளைஞர்கள்.. அதிர வைக்கும் காரணம்?

தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி பாமகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் புதிய அரசியல் கட்சி தலைவராக விஜய் பரிமளிக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் இக்கட்சிக்கு புள்ளையார் சுழி போட்டு தொடங்கிவைக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தொடர்ந்து அறிக்கைகள் வெளியிட்டு வந்தார்.

விஜய் அரசியல் குதித்திருக்கிறாரே தவிர சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் கோட் ரிலீஸான நிலையில் இப்போது அவரது 69 வது படத்தில் நடித்து வருவதாக தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்திருந்தார். அரசியல் தலைவராக அவர் ஆளும் கட்சிக்கு எதிராக கடுமையான விமர்சிக்கவில்லை. அவர் எந்தக் கொள்கையை வைத்திருக்கிறார் என்றெல்லாம் கேள்விகள் பாய்ந்தன.

இதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக தவெகவின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் உள்ள.விசாலையில் பிரமாண்டமாக நடத்தினார் விஜய். இதில் தேமுதிகவை தொடங்கியபோது விஜயகாந்த் கூட்டிய 25 லட்சம் பேரை விட குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும் சமீபத்தில் நடந்த மாநாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு 10 லட்சம் விஜய்காகவே தவெக தொண்டர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில் விஜய் மேடையில் பேசியதெல்லாம் யாரோ எழுதிக் கொடுத்தது, அதை அவர் மனப்பாடம் செய்து பேசினார் என்றெல்லாம் விமர்சித்தாலும், அவர் திமுகவையும், பாஜகவையும் நேரடியாக தாக்கினார். இன்னும் ஒருபடிமேலே போய் திமுகவை வாரிசு அரசியல் என்றார். அதேசமயம் அவரது கொள்கைகளும், அவர் மாநாட்டில் வைத்திருந்த தலைவர்களின் படங்களும் பெரிய விவாதத்தை கிளப்பின.

தவெகவில் இருந்து விலகிய இளைஞர்கள்

இந்த நிலையில், கட்சி ஆரம்பித்து 8 மாதங்களில் விஜயின் முகம் தெரிந்த அளவுக்குப் இக்கட்சியின் கொடியும் அதில் உள்ள சின்னமும் இன்னும் தமிழ் நாட்டில் உள்ள குக்கிராமங்கள் வரையில் சென்று சேர்ந்ததா என தெரியவில்லை. அதற்குள்ளாகவே தவெகவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாமகவில் இணைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் பகுதியைச் சேர்ந்த தவெகவினர் 50 க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி, தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸை நேரில் சந்தித்து, அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டன

மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்று இளைஞர்கள் கூறியுள்ளனர். மாநாட்டிற்கு முன்னதாக இது நடந்திருந்தாலும், விஜய்யின் அதிரடியான பேச்சு எத்தகைய தாக்கத்தை அக்கட்சி தொண்டர்களிடமும் மக்களிடமும் ஏற்படுத்தும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

கட்சிக் கொள்கையில் தெளிவு

அதேசமயம், விஜய்யின் தவெக கட்சியின் கொள்கையில் தெளிவில்லை எனவும், இப்படியே அவர் தொடர்ந்தாலும் அக்கட்சியில் இருந்து பலரும் விலகி மற்ற கட்சிகளில் கூட இணைய வாய்ப்புள்ளதாகவும், அதற்குள் விஜய் தன் கொள்கை, செயல்பாடுகளில் தெளிவை ஏற்படுத்துவது முக்கியம். முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி போன்றோர் நிறைய அனுபவமும், துணிச்சலும், சமயோஜிதமும் இருந்தாலும் கூட சில விஷயங்களில் அரசியல் வல்லுனர்களிடம் ஆலோசனை பெற்று சாணக்கியத் தனமாக முடிவெடுத்து அரசியல் தலைவர்களாக ஜொலித்தனர். கட்சியையும் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். அதேபோல் விஜய்யும் செயல்பட்டால்தான் வெற்றித் தலைவராக இருக்க முடியும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News