இந்தியாவில் அதிகம் சம்பளம் பெறும் நடிகர்களாக சூப்பர் ஸ்டார்கள் அறியப்பட்டாலும் அவர்களை சம்பள விவகாரத்தில் விஞ்சிவிட்டார் மற்றொரு பிரபல நடிகர்.
சினிமாவில் நடிகர்களுக்கான சம்பளம் என்பது அவர்களின் மார்க்கெட் நிலவரத்தைப் பொறுத்து மாறுபடும். ஆனால் ஜெயிக்கும் குதிரையின் மீது பந்தயம் கட்டுவதுபோல்தான் சினிமாவில் ஒருபடம் ஹிட் கொடுத்துவிட்டால் அந்த நடிகர், நடிகைகளை தயாரிப்பாளர்கள் மொய்ப்பார்கள். அடுத்த படத்திற்கு அட்வான்ஸ் கொடுத்து கால்ஷூட் பெற்றுக் கொள்வார்கள். தொடர்ந்து ஹிட் கொடுத்துக் கொண்டே இருந்தால் மாஸ் நடிகர், சூப்பர் ஸ்டார் என பட்டம் கொடுத்து அவர்களை சிகரத்திலேயே வைத்து கோடி கோடியாக சம்பளம் கொட்டிக் கொடுப்பார்கள்.
அதிக சம்பளம் பெறும் நடிகர்கள்
இந்திய சினிமாவிலும் அப்படித்தான் நடந்து வருகிறது. ஒரு காலத்தில் பாலிவுட் நடிகர்கள் அதிகம் சம்பளம் பெறும் நடிகர்களாக அறியப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவிலேயே அதிகம் சம்பளம் பெறும் நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறியப்பட்டார். அவரது கூலி படத்திற்கு ரூ.200 கோடிக்கு மேல் சம்பளம் பெற்றதாகக் கூறப்பட்டது.
அதேபோல் கமல்ஹாசனும் ரூ.200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாக பேச்சு அடிபடும் நிலையில், அவர் தற்போது தயாரித்து நடித்து வரும் தக்லைஃப் படத்தில் புராஃபிட் ஷேர் ஒப்பந்தம் போட்டிருக்கிறார். அதனால், அவர் வாங்கும் சம்பளத்தைவிட அதிக லாபம் கிடைக்கும் என தகவல் வெளியானது.
அடுத்து, தளபதி விஜய் தி கோட் படத்திற்கு ரூ.235 கோடி சம்பளம் வாங்கியதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்து வரும் விஜய்69 படத்திற்கு அவர் ரூ.275 கோடி சம்பளம் வாங்கியதாகக் கூறப்பட்ட நிலையில், ஆசியாவிலேயே அதிகம் சம்பளம் பெறும் நடிகர் என்ற பெருமைக்குச் சொந்தக்காராரானார்.
ஆசியாவிலேயே அதிகம் சம்பளம் பெறும் நடிகர்
இந்த நிலையில், ரஜினி, கமல், விஜய் ஆகியோரை சம்பள விசயத்தில் முறியடித்திருக்கிறார் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான புஷ்பா படம் ரூ. 375 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தில் நடித்ததற்கு தெலுங்கு சினிமாவின் முதல் நடிகராக தேசிய விருது பெற்றார்.
அதனால், அல்லு அர்ஜூன் நடிப்பில் புஷ்பா 2 : தி ரூல் என்று தலைப்பிட்டுள்ள இப்படத்தை பிரமாண்டமாக படக்குழு தயாரித்துள்ளது. இப்படத்தில் அவருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பக்த் பாசில் ஆகியோர் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படம் ஷூட்டிங் முடிந்து, ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளது.
வரும் டிசம்பர் ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்படு ஒரு நாள் முன்னதாகவே அதாவது டிசம்பர் 5 ஆம் தேதி இப்படம் ரிலீசாகவுள்ளது. முக்கிய மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் ரிலீசுக்கு முன்பே ரூ.900 கோடி பிசினஸ் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி ஒட்டுமொத்த சினிமாத்துறையையே அதிரவைத்தது.
தற்போது இன்னொரு தகவல் வெளியாகிறது. அதன்படி, அல்லு அர்ஜூன் புஷ்பா – 2 – ல் நடிக்க ரூ.300 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிகம் சம்பளம் வாங்கி வரும் விஜய், ரஜினி, கமல் ஆகியோரை சம்பளம் விசயத்தில் அல்லு அர்ஜூன் முந்திவிட்டதாகவும், அதனால் இப்போதைக்கு ஆசியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகராக அல்லு அர்ஜூன் இருக்கிறார் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.