புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

முத்துவின் போனை சிட்டியிடம் கொடுக்க போகும் ரோகினி.. வெளிவரப் போகும் கல்யாணியின் உண்மையான ரகசியம்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜிடம் இருக்கும் போனை எப்படியாவது எடுக்க வேண்டும் என்று ரோகினி இரவு முழுவதும் முயற்சி எடுத்துப் பார்க்கிறார். ஆனால் வீட்டு வாசலிலேயே முத்துவுடன் மீனா உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதால் ரோகினியால் போன் எடுக்க முடியாமல் போய்விட்டது. சரி இருந்தாலும் பரவாயில்லை காலையில் எழுந்தது மனோஜிடம் இருந்து போனை எடுத்துக் கொள்ளலாம் என்று தூங்கி விடுகிறார்.

பிறகு வழக்கம்போல் மீனா வேலை பார்ப்பதற்காக கதவை திறக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அண்ணாமலையிடம் போய் பெர்மிஷன் கேட்கிறார். உடனே கதவு திறந்த அண்ணாமலை, குடிச்சிட்டு வந்த மூன்று பசங்களுக்கும் அட்வைஸ் கொடுத்துவிட்டு வீட்டுக்குள் விடுகிறார். இதற்கிடையில் முத்துவை மட்டம் தட்டி பேசி மனோஜை பெருமையாக பேசி விஜயா பாசத்தை கொட்டிவிட்டார்.

அதே மாதிரி ரோகிணியும், மனோஜிடம் ஒரு நாள் நீ குடித்ததற்கு அந்த முத்துவுடன் உங்க அப்பா கம்பர் பண்ணி பேசுவதெல்லாம் உனக்கு தேவையா? நீ இப்ப யாரு பெரிய தொழிலதிபர் அதற்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள் என்று அட்வைஸ் பண்ணி மனோஜிடம் இருக்கும் கோட்டில் இருந்து முத்துவின் போனை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டார்.

அடுத்ததாக முத்துவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது மனோஜை பார்த்து பாராட்டி மாலை போடுவதற்கு வீட்டிற்கு நபர்கள் வருகிறார்கள். அவர்கள் வந்ததும் விஜயா மற்றும் ரோகினி ரொம்பவே கெத்தாக நின்று கொண்டு மனோஜை பெருமையாக பேசி விட்டார்கள். வந்தவர்களும் அதற்கேற்ற மாதிரி மனோஜ்க்கு மாலை போட்டு மரியாதை செலுத்தி ஓவராக புகழ்ந்து விட்டார்கள்.

ஆனால் அவர்கள் மனோஜை புகழ்ந்து பேசும் பொழுதெல்லாம் ரோகினி, மீனாவை பார்த்து ஏளனமாக சிரிக்கிறார். ஏனென்றால் மீனாவின் தம்பி பற்றிய விஷயங்கள் ரோகினிக்கு கிடைத்து விட்டதால் கொஞ்சம் ஓவராக ஆடுகிறார். அடுத்ததாக மனோஜ் ஓவர் பெருமையில் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்து விட்டார். அத்துடன் இனி இந்த வீட்டிற்குள் என்னை வா போ என்று பேசுவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

மற்றவர்கள் மற்றும் வெளி இடத்தில் எல்லாம் சார் என்று மரியாதையுடன் பேசுங்கள் என்று விஜயா மற்றும் அனைவருக்கும் சொல்கிறார். உடனே முத்து, நீ என்னதான் வானத்துக்கு பறந்தாலும் அண்ணாமலை விஜயாவுக்கு மகன் என்பதை மறந்து விடாதே என்று சொல்கிறார். இதைப்பற்றி மனோஜ், ரோகினி இடம் சொல்லிய பொழுது ரோகினி மீனாவை பக்கத்தில் வைத்துக்கொண்டு யார் எப்படிப்பட்டவங்க என்று கொஞ்சம் சீக்கிரத்திலேயே புரிந்து விடும் என சொல்லிட்டு ரூம்குள் போய் விடுகிறார்.

அடுத்ததாக முத்து, வேலைக்கு கிளம்பிய நிலையில் காலையில் இருந்து எந்த போனும் வரவில்லை என் போனை எடுத்து தா என்று கேட்கிறார். ஆனால் மீனா எங்கே தேடியும் போன் இல்லாததால் முத்து பதட்டத்துடன் எல்லா பக்கமும் தேட ஆரம்பித்து விடுகிறார். இதையெல்லாம் பார்த்த ரோகினி நீ எங்கே தேடினாலும் போன் கிடைக்காது என்று சொல்லி முத்துவின் போனை சுவிட்ச் ஆப் பண்ணி விட்டார்.

ஆனால் அந்த போனில் மீனாவின் தம்பி பற்றிய விஷயங்கள் இருக்கிறது என்று முத்து கொஞ்சம் பதட்டம் அடைய ஆரம்பித்து விட்டார். ஆனால் ரோகிணி கையில் இருக்கும் போனை எடுத்துக் கொண்டு சிட்டியிடம் கொடுக்கப் போகிறார். இருந்தாலும் இந்த ஒரு வீடியோ வெளிவந்தால் பெருசாக மீனா மற்றும் முத்துவிற்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை.

ஆனால் இதற்கு அடுத்து தான் ரோகிணிக்கு மொத்த ஆப்பம் இருக்கிறது என்பதற்கு ஏற்ப இந்த போன் எப்படி காணாமல் போனது, வீடியோ எப்படி சோசியல் மீடியாவில் பரவியது என்ற விஷயத்தை ஒவ்வொன்றாக முத்து கண்டுபிடிக்க போகிறார். அப்படி முத்து கண்டுபிடிக்க போகும்பொழுது தான் ரோகிணி பற்றிய உண்மையான ரகசியங்கள் அனைத்தும் வெளிவர போகிறது. அதாவது கலகம் பிறந்தால் தான் வழி பிறக்கும் என்று சொல்வதற்கு ஏற்ப தற்போது ஆரம்பமாகிய சின்ன பிரச்சினை தான் ரோகிணிக்கு பெருத்த வலியை கொடுக்கப் போகிறது.

- Advertisement -spot_img

Trending News