திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

சிங்கப்பெண்ணில் முடிவுக்கு வரும் அன்பு-ஆனந்தியின் கண்ணாமூச்சி ஆட்டம்.. மகேஷின் காதலுக்கு சங்கு ஊத போகும் மித்ரா!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஒரு சின்ன வீட்டுக்குள்ள ஆனந்தியை ஒளித்து வைத்துக் கொண்டு அது அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்வது போல் அன்பு நடந்து கொள்வது என்பது கொஞ்சம் எதார்த்தத்திற்கு மிஞ்சினதாக இருக்கிறது.

தயவு செஞ்சு இந்த எபிசோடை முடித்துவிட்டுருங்க என சீரியல் ரசிகர்கள் கடந்த வாரத்தில் இருந்து கதறிக் கொண்டிருக்கிறார்கள். இன்று வரை என்ன நடந்தது என்று வார்டனிடம் சொல்லாமல் ஆனந்தி அன்பு வீட்டில் இருப்பது சகித்துக் கொள்ள முடியவில்லை.

முடிவுக்கு வரும் அன்பு-ஆனந்தியின் சித்து விளையாட்டு

இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் ஆனந்தி மற்றும் அன்பு இருவரும் ரொம்பவும் நெருக்கமாகவே பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனந்தியை விட்டுவிட்டு பங்களாதேஷிற்கு எப்படி போவது என அன்பு ரொம்பவே மனம் வருந்தி போகிறான்.

அந்த நேரத்தில் ஆனந்தி அன்பு விடம் தன்னுடைய பச்சை கலர் ஜாக்கெட் காணவில்லை என சொல்கிறாள். இது என்ன புது கதையாக இருக்கிறது என வெளியே ஆளுக்கு போகும் அன்பு, அவனுடைய அம்மா கையில் அந்த ஜாக்கெட் இருப்பதை பார்க்கிறான்.

அன்புவின் அம்மா இந்த ஜாக்கெட் எங்கிருந்து வந்தது, உன் தங்கச்சி யாழினி புடவை கட்டுவதே கிடையாது. இந்த ஜாக்கெட் எங்கிருந்து வந்தது என எனக்கு தெரிய வேண்டும் நான் ஒன்று சோதிக்க போகிறேன் என சொல்கிறார்.

அந்த நேரத்தில் அன்புவின் தங்கச்சி யாழினி வந்து அது என்னுடைய ஜாக்கெட் தான் என்று சொல்கிறாள். இது அன்பு மற்றும் ஆனந்திக்கு ரொம்பவே குழப்பமாக இருக்கிறது. அடுத்த நாள் காலையில் யாழினி தனக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருப்பதாக சொல்லிவிட்டு சீக்கிரமாக கிளம்பி விடுகிறாள்.

அதை தொடர்ந்து அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் அவனுடைய அம்மாவை ஏமாற்றிவிட்டு வீட்டை விட்டு வெளியில் வருகிறார்கள். ஆனந்தி சுவர் ஏறி குதித்து வெளியில் வரும்போது சரியாக அந்த இடத்தில் யாழினி நிற்கிறாள். அன்பும் சரியாக அந்த இடத்தில் பைக் உடன் வந்து நிற்கிறான்.

இருவருமே யாழினியை பார்த்து பயத்தில் நிற்பது போல் நேற்றைய எபிசோடு முடிந்து இருக்கிறது. அதே மாதிரி மகேஷ் தன்னுடைய அப்பாவிடம் எதற்காக நீங்க என்ன அடிச்சீங்க, ஆனந்தியை நான் காதலிப்பது உங்களுக்கு தவறாக தெரிகிறதா என கேட்கிறான்.

அதற்கு மகேஷ் அப்பா நீ ஆனந்தியை காதலிப்பது எல்லாம் சரிதான், ஆனால் அதை உன் அம்மாவிடம் சொன்னால் அதை ஏற்றுக் கொள்வார் என்று நினைக்கிறாயா. அம்மாவின் சூழ்நிலை இப்போது சரியாக இல்லை அதனால் பொறுமையாக இருந்து நேரம் பார்த்து இந்த காதலை பற்றி பேசு என்கிறார்.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த மகேஷின் அம்மா மித்ராவுக்கு போன் பண்ணி, மகேசை அவனுடைய அப்பா அடித்ததை பற்றி சொல்கிறார். அது மட்டும் இல்லாமல் மகேஷின் வாழ்க்கையில் இருந்து ஆனந்தி வெளியேற வேண்டும்.

அதற்கு என்ன பண்ண வேண்டும் என நாம் இருவரும் நேரில் சந்தித்து பேசலாம் வீட்டுக்கு வா என்று அழைக்கிறார். எது எப்படியோ இன்னும் மூன்று நாட்களில் அன்பு பங்களாதேஷ் கிளம்பியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறான். இதனால் கண்டிப்பாக ஆனந்தி அன்புவின் வீட்டை விட்டு வெளியேற வேண்டும். அன்பு பங்களாதேஷிற்கு போகிறானா அல்லது மீண்டும் கம்பெனியில் வேலைக்கு செல்கிறானா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -spot_img

Trending News