புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

பிரபல நடிகை தீபிகா படுகோனை ரிஜெக்ட் செய்த பிரபாஸ்.. ஏன் தெரியுமா?

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். அவர் 2002ஆம் ஆண்டு வெளியான ஈஸ்வர் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2004ஆம் ஆண்டு வந்த வர்ஷம் படத்தின் மூலம் பிரபாஸிற்கு பெரிய பெயர் கிடைத்தது.

பின்னர் தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்து வந்தாலும், அவருக்கு பான் இந்தியா அளவு புகழ் ஏற்படுத்தி கொடுத்தது பாகுபலி படம் தான். சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி படமும் வசூல் ரீதியாக வரவேற்பு பெற்ற ஒரு படமே.  இந்த படத்தில் தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 

டாப் பாலிவுட் நடிகையை ரிஜெக்ட் செய்த பிரபாஸ்

இந்த நிலையில் தீபிகா படுகோனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு முன்பே பிரபாஸ்-க்கு வந்திருக்கிறது. ஆனாலும் வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான ‘பத்மாவத்’ படத்தில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங் மற்றும் சாஹித் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இப்படத்தில் சாஹித் கபூர் நடித்த, ராஜபுத்திர மன்னரான மகாராவல் ரத்தன் சிங்கின் பாத்திரம் முதலில் பிரபாஸிற்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் முடியாது என்று ரிஜெக்ட் செய்துள்ளார். அதற்க்கான காரணம் என்ன தெரியுமா?

 அப்போது பாகுபலி 2 படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால், இதன் கதாபாத்திரம் தனித்து நிற்கும் வகையில் இல்லை என்பதற்காகவும், பிரபாஸ் அந்த வாய்ப்பைத் தவிர்த்தாராம். சரியான முடிவைதான் எடுத்திருக்கிறார். ஏன் என்றால் அந்த படத்தில் வில்லனுக்கு இருக்கும் முக்கியத்துவம் கூட ஹீரோக்கு இருக்காது. 

மேலும் தோற்றுப்போய் மனைவியை பறிகொடுக்கும் கதாபாத்திரம், அதில் நடித்தால் தனது பிரம்மாண்டம் குறைந்துவிடும் என்று நினைத்திருக்கிறார். 

- Advertisement -spot_img

Trending News