ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

TVK முதல் மாநாடிற்கு இத்தனை கோடி செலவா? தாக்குப் பிடிப்பாரா விஜய்.? பிரபல நடிகர் ஓபன் டாக்

தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்குவதாக விஜய் அறிவித்ததுமே சினிமாத்துறையினர், அரசியல் கட்சித் தலைவர்கள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைவருக்கும் விஜய் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியை உருவாக்கியது.

ஏனென்றால் விஜய் அரசியலில் ஆழங்கால்பட்டவர் அல்ல. ஆனால், திராவிட அரசியலை பார்த்து வளர்ந்தவர். அதிமுக, திமுக என இரு கட்சிகளும் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர். அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் அவர் அரசியல் வருகை என்பது திராவிட கட்சிகளைவிட மற்ற கட்சிகளுக்குத்தான் பதற்றத்தை ஏற்படுத்தியது.

ஏனென்றால் திராவிட கட்சிகளுக்கு எதிராக தங்கள் ஓட்டு வங்கியை இத்தனை ஆண்டுகள் பாதுகாத்து சமீபத்தில் நடந்த தேர்தலில் ஓட்டு வங்கி அதிகரித்த நிலையில், விஜயின் அரசியல் வருகை அந்த வாக்கு வங்கியை சிதறடித்து விடும் என அஞ்சியதாக அரசியல் விமர்சகர்கள் கூறினர். அதனால் விஜய்யுடன் கூட்டணி வைக்கவும் அக்கட்சி தலைவர்கள் தயாராகிவிட்டனரோ என விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், விஜயின் அரசியல் வருகையும், மக்களின் வரவேற்பும் எப்படி இருக்கும் என கேள்வி எழுந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வெற்றிக் கொள்கை திருவிழா என்ற பெயரில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சம் தொண்டர்கள் திரண்டினர்.

தவெக முதல் மாநாடு செலவு குறித்து பிரபல நடிகர் பேட்டி

இம்மாநாட்டிற்கான முழுமுதற் செலவும் விஜய்யினுடையது என்பதால், அவர் எத்தனை கோடி செலவு செய்திருப்பார்? என சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்தது. அதன்படி, திமுக ஆதவராளரும் பிரபல நடிகருமான போஸ் வெங்கட் தவெக மா நாட்டிற்கு எத்தனை கோடி விஜய் செலவு செய்திருப்பார் என்று பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ”விஜயின் ’தி கோட்’ படத்தை 4 முறை தியேட்டரில் குடும்பத்துடன் பார்த்தோம். 200 கோடி சம்பளம் வாங்குகிற மிகச்சிற நடிகர் விஜய். அவரை விட சிறந்த நடிகர் இங்கே யாருமில்லை.ஒரு காலத்தில் ரஜினி சாரை பார்த்தேன். இன்று விஜய் தான் ஹீரோ. அவர் சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டே அரசியல் செய்திருக்கலாம். அரசியலில் பணம் செலவாகும் என்பதால் கூறினேன்.

மாநாடு நடத்த ரூ.60 கோடி, 70 கோடி செல்வாகியிருக்கும். அரசியலில் இருந்தால் பணம் செலவாகிட்டே இருக்கும். ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தாலே அரசியல் இருந்தால் அதில் வாங்கிய பணத்தை இதில் போட வேண்டியதிருக்கும். ஏனென்றால் இதுமாதிரி 4 மாநாடு நடத்தி காசு இல்லாமல் போனால்?” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், விஜய் நடத்திய தவெகவின் முதல் மாநாட்டில் கிட்டத்தட்ட போஸ் வெங்கட் கூறியடி 60 கோடிக்கு மேல் தான் செலவு ஆகியிருக்கும். அவர் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டால் இதுவரை சேர்த்து வைத்த பணத்தில் இருந்துதான் செலவு செய்வார்.

இந்த நிலையில், விஜய் வரும் 2026 தேர்தலில் திட்டமிட்டு செயல்பட்டு மக்களுக்கு தன் அரசியல் வருகையை தெரியப்படுத்தி விட்டால் அவர் செலவு செய்ததற்கான பிரயோஜனம் இருக்கும், அதேபோல் அவர் நிச்சயம் அடுத்த தேர்தலில் ஜெயிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

- Advertisement -spot_img

Trending News