புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

விஜய் மனைவியை பிரிஞ்சு 3 வருஷம் ஆகுதா?. ஓஹோ தவெக மாநாட்டுக்கு சங்கீதா வராததுக்கு இதுதான் காரணமா!

Thalapathy Vijay: நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றி கழகம் கட்சியின் மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட ஆறு முதல் எட்டு லட்சம் பேர் கலந்து கொண்டதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

மாநாடு மற்றும் விஜய்யின் கருத்துக்களுக்கு கலவையான விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதா அந்த மாநாட்டில் கலந்து கொள்ளாதது பெரிய அளவில் பேசும் பொருளாகி இருக்கிறது.

தவெக மாநாட்டுக்கு சங்கீதா வராததுக்கு இதுதான் காரணமா!

யோகி பாபுவின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் இவ்ளோ பெரிய பில்டிங்ல உங்களுக்கு இதுதான் பிரச்சினையா என்பது போல் தான் இருக்கிறது. சங்கீதா விஜய் இந்த கட்சியின் மாநாடு மட்டுமில்லாமல் கடந்த சில வருடங்களாகவே விஜய் நடித்த படங்களின் விழாக்களிலும் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார்.

இதனாலேயே இவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக இஷ்டத்திற்கு வதந்திகள் பரவ ஆரம்பித்தன. இந்த மாநாடு முடிந்த பிறகு விஜய் மற்றும் சங்கீதா பிரிந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு கட்டுக் கதை உதவி வருகிறது.

உண்மையில் இவர்களுக்குள் எந்தப் பிரச்சனையும் கிடையாது. தான் தேர்ந்தெடுத்து இருக்கும் அரசியல் பாதையால் தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது. அவர்கள் எந்த விமர்சனத்தையும் வெறுப்பாளர்கள் வைத்து விடக்கூடாது என்பதில் விஜய் ரொம்பவே தெளிவாக இருக்கிறாராம்.

அதனால்தான் அரசியல் அறிவிப்புக்கு முன்னரே சங்கீதா விஜய் பொதுவெளிகளில் வருவதை தவிர்க்க தொடங்கி இருக்கிறார். இனியும் அதுதான் தொடரும் என விஜய்யின் ஆதரவாளர்கள் தொடர்ந்து விஜய்க்கு எதிராக இணையதளத்தில் பரப்பப்படும் வதந்திகளுக்கு அவருடைய ஆதரவாளர்கள் பதிலளித்து வருகிறார்கள்.

- Advertisement -spot_img

Trending News