புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

சிட்டியிடம் போட்டுக் கொடுத்து விஜயாவிடமும் வீடியோவை காட்டிய ரோகினி.. பதிலடி கொடுக்கப் போகும் முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து போன் காணவில்லை என்று பதட்டத்துடன் வீடு முழுவதும் தேடிப் பார்க்கிறார். அப்பொழுது நண்பருக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை சொல்லி மனோஜ் பார்ட்டி வைத்த இடத்திற்கு போய் பார்க்கலாம் என்று முத்து, நண்பரை கூட்டிட்டு போய் பார்க்கிறார்.

ஆனால் அங்கே முழுவதும் செக் பண்ணிய பொழுது எந்த போனும் இல்லை என்று போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்க முத்து மற்றும் நண்பரும் போய்விட்டார். அதன்படி போன் காணவில்லை என்று முத்து கம்ப்ளைன்ட் கொடுத்துவிட்டு சவாரிக்கு போய்விட்டார். இதற்கிடையில் ரோகிணி, முத்துவின் போனை ஆன் பண்ணி அதில் இருக்கும் வீடியோவை அவருடைய போனுக்கும் அனுப்பி வைத்து விட்டார்.

அதன் பிறகு அந்த போனை எடுத்துக்கொண்டு சிட்டியை பார்க்க வித்யாவை கூட்டிட்டு போகிறார். போனதும் வீடியோ கிடைத்து விட்டது என்று சொல்லிய பொழுது சிட்டி அந்த வீடியோவை அனுப்பி வை என்று சொல்கிறார். அதற்கு வித்தியா, முதலில் நாங்கள் சொன்னபடி PA எங்க வழியில் தலையிடாதபடி நீ உன்னுடைய வேலை ஆரம்பி அதன்பிறகு நாங்கள் வீடியோ தருகிறோம் என்று தவறாக சொல்லிவிடுகிறார்.

உடனே சிட்டி, அவருடைய ஆட்களை அனுப்பி PA வை தூக்கிட்டு வந்து விடுகிறார்கள். இதை மறைந்து இருந்து ரோகினி மற்றும் வித்யா பார்க்கிறார்கள். அதன்பிறகு நாங்கள் கொடுக்கிற ட்ரீட்மெண்டில் இனி PA உங்கள் வழிக்கு வர மாட்டார் என்று சொல்லி ரோகினிடமிருந்து வீடியோவை வாங்கி விடுகிறார். வீடியோவை பார்த்து சிட்டி, இத வச்சு இன்னும் என்னென்ன ஆட்டம் காட்ட போறேன் மட்டும் வேடிக்கை பாருங்க என்ற சொல்லி சந்தோஷப்பட்டு கொள்கிறார்.

இதனை அடுத்து வித்யா, இந்த வீடியோ வெளி வந்தால் தேவையில்லாமல் முத்து மீனாவுக்கு தான் பிரச்சினை வரும் என்று சொல்கிறார். அதற்கு ரோகிணி, எனக்கு அதைப் பற்றி பிரச்சனை இல்லை நான் சந்தோசமாக இருக்கணும். எனக்கு பிரச்சினை வரக்கூடாது என்றால் நான் என்ன வேணாலும் பண்ணுவேன் என்று சொல்லி வீட்டிற்கு போகிறார்.

அதே மாதிரி வீட்டுக்கு போனதும் ரோகிணி போனில் இருக்கும் அந்த வீடியோவை விஜயாவிடம் போட்டு காட்டுகிறார். உங்களிடம் இருந்து பணத்தை திருடிட்டு போனது வேறு யாருமில்லை மீனாவின் தம்பி சத்யா தான் என்று சொல்கிறார். விஜயா அந்த வீடியோவை பார்த்ததும் கோபத்தில் மீனாவிடம் சண்டை போட போகிறார். கடைசியில் போன் எப்படி காணாமல் போனது, வீடியோ எப்படி வெளியே வந்தது என்ற உண்மை முத்துக்கு தெரிய வரப்போகிறது.

அந்த வகையில் மொத்த பிரச்சனைக்கும் ரோகிணி தான் காரணம் என்று முத்து தெரிந்து கொண்ட பின் மொத்தத்திற்கும் சேர்த்து பழி தீர்க்கும் விதமாக ரோகிணியை வச்சு செய்யப் போகிறார். தேவை இல்லாமல் முத்து விஷயத்தில் மூக்கை நுழைத்து சீண்டி விட்டோம் என்று ரோகிணி அல்லல் படப் போகிறார்.

- Advertisement -spot_img

Trending News