Bloody Beggar: நடிகர் கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ப்ளடி பெக்கர் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. இதற்கு காரணம் கவினின் அசாதாரணமான நடிப்புதான். லிஃப்ட் மற்றும் டாடா படங்களின் மூலம் கவின் தன்னை ஒரு சிறந்த நடிகராக ரசிகர்களிடம் நிரூபித்து இருந்தார்.
ஆனால் ஒரு பிச்சைக்காரன் கேரக்டரில் கவினால் இப்படி நடிக்க முடியுமா என ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் மிரண்டு போய் இருக்கிறார்கள். இயக்குனர் நெல்சன் சமீபத்தில் Filament Pictures என்னும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருந்தார்.
தன்னுடைய தயாரிப்பில் முதன் முதலில் வெளியாக இருக்கும் படம் தான் ப்ளடி பெக்கர். இந்த படத்தின் சில நிமிட காட்சி ஒன்று வெளியாகி இருந்தது. இரண்டு கால்கள் இல்லாத பிச்சைக்காரனாக சிக்னலில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பார் கவின்.
ரிலீசுக்கு முன்னாடியே வம்பாகி போச்சே!
ஆட்டோக்காரர் ஒருவரிடம் எனக்கெல்லாம் இரண்டு கால் இருந்தா ஆட்டோ ஓட்டி பொழச்சிருப்பேன் என ரொம்பவும் பாவமாக சொல்வார். அடுத்த வினாடியே சாலையில் ட்ரம் சத்தம் கேட்டதும் எழுந்து நடனமாடுவார்.
இந்த காட்சியில் கவினின் நடிப்பு சொல்வதற்கு அவ்வளவு பிரமாதம். இடைத்தொடர்ந்து படத்தின் டிரைலரும் வெளியானது. இந்த நிலையில் நேற்று ப்ளடி பெக்கர் படத்தின் மற்றொரு வீடியோ வெளியாகி இருக்கிறது. ரிலீசுக்கு முன்னாடியே என்ன இது வம்பா போச்சு என்ற அளவுக்கு அந்த காட்சி இருக்கிறது.
ஆரஞ்சு நிற பனியன் அணிந்து கொண்டு உணவு டெலிவரி பாய் அட்ரஸ் தேடி அலைகிறார். இந்த அட்ரஸ் தானே சொன்னான் போனை எடுக்க மாட்டேங்குறானே என புலம்பிக்கொண்டே பைக்கில் வருகிறார். அப்போது கவின் ஏ சோறு தூக்கி இங்கே வா என்று சொல்லிக்கொண்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்க்கு நடனம் ஆடுகிறார்.
மேலும் அந்த டெலிவரி பாயிடம் ஏன் நாங்க எல்லாம் சாப்பாடு ஆர்டர் பண்ண கூடாதா என கேட்கிறார். இந்த வசனம் எல்லாம் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் சோறு தூக்கி என்னும் வார்த்தை தான் இது போன்ற டெலிவரி பாய்களை அவமதிப்பது போல் இருப்பதாக தற்போது சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.
பிச்சைக்காரனாக இருந்தாலும் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் வாழ்க்கையை ரசித்து வாழும் மனிதனாக கவின் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இருந்தாலும் இந்த வசனத்தை வைக்கும் பொழுது கொஞ்சம் யோசித்து இருக்கலாம் போல. இது இந்த அளவுக்கு நெகட்டிவ் விமர்சனத்தை சந்திக்கும் என கண்டிப்பாக பட குழு எதிர்பார்த்து இருக்காது.