வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

இவ்ளோ தாங்க Feminism.. சிம்பிளாக முடித்த சூர்யா.. ஜோ கொடுத்து வச்சவங்க

சூர்யா தற்போது கங்குவா பட ப்ரோமோஷனில் பிசியாக உள்ளார். சிவாவின் இயக்கத்தில் ஞானவேலின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி திரையில் வெளியாகின்றது. சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக பொருட்ச்செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் கங்குவா.

அதனால் தீவிரமாக வடமாநிலங்களில் ப்ரோமோஷன் செய்து வருகிறார்.  ஏன் என்றால் அவர் எதிர்பார்த்த 2000 கோடி வசூல், அங்கு தான் சாத்தியம்.  இப்படி இருக்க தன்னை பற்றியும், மனைவி ஜோ பற்றியும் பல சுவாரசியமான விஷயங்களை நிறைய பேட்டிகளில் கொடுத்து வருகிறார்.  அப்படி சமீபத்தில் இவர் சொன்னதை கேட்ட பெண்கள், “இப்போது தெரிகிறதா?  ஏன் சூர்யாவை பிடித்திருக்கிறது என்று..” சொல்லி வருகின்றனர்.

உண்மையில் சூர்யா எப்போதுமே ஒரு பக்கா ஜென்டில்மேன்.  ஏன் என்றால் இதுவரை எந்த கிசுகிசுவிலும் அவர் சிக்கியதே இல்லை.  ஒரு முறை சிக்கினார்.  அவரையே திருமணமும் முடித்து விட்டார்.  அன்று முதல் இன்று வரை, காதலர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகின்றனர்.

மும்பை செட்டில் ஆனதுக்கு காரணம் இது தான்..

 கடந்த இரண்டு வருடங்களாக சூர்யாவின் படம் எதுவும் வெளியாகாமல் இருந்ததால் சூர்யா ரசிகர்கள் சற்று ஏக்கத்தில் இருந்தனர்.  அவர்களின் ஏக்கத்தை போக்கும் வகையில் கங்குவா திரையில் வெளியாக இருக்கின்றது. கண்டிப்பாக இப்படம் சூர்யாவிற்கு மிகசிறந்த ஒரு கம்பேக் படமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

பாலிவுட்டில் focus செய்யும் சூர்யா, அங்கு தனது மார்க்கெட்டை உயர்த்த வேண்டும் என்று நினைக்கிறார்.  அடுத்ததாக கர்ணன் படத்திலும் நடிக்கவிருக்கிறார்.  இப்படி இருக்க சமீபத்தில் ஒரு பேட்டியில், ஏன் இவர்கள் மும்பையில் செட்டில் ஆனார்கள் என்று கூறியிருக்கிறார்.  அதில் அவர் கூறியதாவது, “ஜோதிகா மும்பையை சேர்ந்தவர். அவர் எனக்காக கடந்த பல ஆண்டுகளாக சென்னையில் இருந்தார்.”

“ஒரு கணவனுக்காக மனைவி செய்யும் விஷயங்களை மனைவிக்காகவும் கணவன் செய்யவேண்டும்.  ஏன் எப்போதும் ஒரு பெண் கொடுப்பவளாகவும், ஆண் அவளிடமிருந்து அனைத்தையும் பறிப்பவனாக இருக்க வேண்டும்.  ஒரு ஆணுக்கு என்னவெல்லாம் தேவையாக இருக்கிறதோ, அது எல்லாமே பெண்ணுக்கும் தேவை தான்.  எனவே தான் ஜோதிகாவிற்காக நான் மும்பைக்கு மாறியிருக்கின்றேன்” என்றார் சூர்யா.

பல நாட்களாக, “ஜோதிகா சூர்யாவை பிரித்து தன்னுடன் அழைத்து வந்துவிட்டார்” என்று வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர்.  தற்போது, அதற்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சூர்யா. 

- Advertisement -spot_img

Trending News