வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

கங்குவா படக்குழுவினர் அதிர்ச்சி.. சடலமாக மீட்கபட்ட படத்தொகுப்பாளர்.. என்னதான் ஆச்சு?

சிறுத்தை சிவா – சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் அட்வெண்ச்சர் பேண்டஸி திரைப்படமான கங்குவா நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதையடுத்து படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ரிலீஸுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் தான் இருக்கும் நிலையில் கங்குவா படக்குழுவினருக்கு இன்றைய தினம் காலையே ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.  கங்குவா படத்தின் படத்தொகுப்பாளரான நிஷாத் யூசூஃப் மரணம் அடைந்திருக்கிறார். இவர்தான் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த புதிய படத்துக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றி இருந்தார்.

பிளாட்-ல் சடலமாக கிடந்த படத்தொகுப்பாளர்..

கேரளாவை சேர்ந்த படத்தொகுப்பாளரான 43 வயதாகும் நிஷாந்த் யூசுஃப் கொச்சியிலுள்ள பனம்பிள்ளி நகரில் உள்ள தனது பிளாட்டில் அதிகாலை 2 மணிக்கு இறந்த நிலையில் கண்டறியப்பட்டார்.  இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்து நிஷாத் யூசூஃப் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக எர்ணாக்குளம் அரசு பொது  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

நிஷாத் இறப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  திரை துறையில் உச்சிக்கு சென்று கொண்டிருக்கும் வேளையில், இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.  இவர், கடந்த 2022இல் வெளியான தள்ளுமல்லா என்ற படத்துக்காக சிறந்த படத்தொகுப்பாளர், கேரளா அரசு விருதை வென்றார்.

இதைத்தொடர்ந்து பிரமாண்டமாக உருவாகியிருக்கும் கங்குவா படத்துக்கு இவர்தான் எடிட்டராக பணிபுரிந்திருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் மரணம் அடைந்துள்ளார்.  ஏற்கனவே கங்குவா படத்தில் கலை இயக்குநர் மிலன் உயிரிழந்த நிலையில், தற்போது எடிட்டரும் இறந்திருப்பது படக்குழுவினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் நிச்சயம் கங்குவா படம் வெற்றிபெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  ஆனால் படத்துக்காக பாடுபட்ட இவர்கள் வெற்றியின் போது கூட இருக்கமாட்டார்கள் என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

- Advertisement -spot_img

Trending News