செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

கொஞ்சம் சாத்திக்கிட்டு இருந்தீங்கன்னா படம் ஓடும்.. இல்லனா ஊ ஊ தான்.. சூர்யாவை பொறித்தெடுத்த நெட்டிசன்கள்

தமிழ் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் கலக்கி வருகிறார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் துணை நடிகராக பல ஆண்டுகள் நடித்தும் மக்கள் மத்தியில் கவனம் பெறாமல் இருந்த விஜய் சேதுபதி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் உதவியால் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

தொடர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல படங்களில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.  தற்போது பிக் பாசிலும் கலக்கி கொண்டிருக்கிறார்.  இவரது நையாண்டி பேச்சு மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.  மேலும் தொடர்ந்து தனது அடுத்த இன்னிங்க்ஸை எடுத்து கொண்டிருக்கிறார். 

இந்த நேரத்தில் இவரது மகனும் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார்.  விஜய் சேதுபதி எந்த அளவிற்கு கருத்தாக பேசுவாரோ அவருக்கு தலைகீழாக அவரது மகன் சூர்யா பேசிக்கொண்டிருக்கிறார்.  ஏற்கனவே பஞ்சாயத்து, ஆனாலும் இவர் வாய் ஓயவில்லை. 

இதெல்லாம் தேவையா..

நடிகர் சூர்யா சேதுபதி, விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடி தான் படத்திலும், சிந்துபாத் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இதையடுத்து தற்போது, சண்டை பயிற்சியாளர் அனல் அரசு எடுக்கும் ஃபீனிக்ஸ் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தற்போது இந்த படம் கங்குவா படத்துடன் மோத போகிறது.  இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் நடந்து வருகிறது.  அந்த ப்ரோமோஷன் பேட்டிகளில் இவர் பேச்சு பேசும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.  சமீபத்தில் கூட, “அப்பா எனக்கு தினமும் செலவுக்கு 500 ரூபாய் மட்டும் தான் தருவார்.  அது எனக்கு பத்தவே பத்தாது.  அதனால் தான் சினிமாவுக்கு வந்தேன்” என்று ஏடாகூடமாக பேசி வாங்கி கட்டிக்கொண்டார். 

இந்தப் பிரச்சனையே இன்னும் அடங்காத நிலையில், அடுத்த பஞ்சாயத்தை இழுத்து வைத்துள்ளார் சூர்யா.அப்பா சினிமாவில் இருப்பதால் இவை உங்களுக்கு எளிதில் கிடைக்கிறதா என தொகுப்பாளர் கேள்வி எழுப்ப, அதற்க்கு பதிலளித்த சூர்யா, “வாய்ப்புகள் வேண்டுமானால் எனக்கு எளிதாக கிடைத்திருக்கலாம். ஆனால் அதை தக்கவைக்க மிகவும் உழைக்க வேண்டும் என்றார். அத்துடன், டாக்டர் மகன் டாக்டர் ஆகலாம், போலீஸ் மகன் போலீஸ் ஆகலாம் என்ற போது ஏன் நடிகரின் மகன் நடிகராக வரக்கூடாது என்ற சந்தேகம் எழுந்துகொண்டே இருக்கிறது” என்றார்.

அவர் இதில் தவறாக எதுவுமே பேசவில்லை என்றாலும் கூட ஆரம்பத்தில் இவர் கொஞ்சம் தெனாவட்டாக பேசியதால் தற்போது இவர் சாதாரணமாக எது பேசினாலும் நெட்டிசன்கள் விமர்சிக்கிறார்கள்.  அப்படி தான் இப்போதும், “கொஞ்சம் சாத்திக்கிட்டு இருந்தா படம் ஓடும்.. இப்படியே பேசி கொண்டே இருந்தால் ஊ ஊ தான்..” என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்..

ஒருவகையில் பாவமாக தான் இருக்கிறது.. இந்த முறை இவர் தவறாக எதுவுமே பேசவில்லை.  இருப்பினும், இதெல்லாம் தேவையா கோபி என்று தான் கேட்க தோன்றுகிறது. 

- Advertisement -spot_img

Trending News