இப்போதெல்லாம், தெருவுக்கு தெரு யூட்யூப் சேனல்களை ஆரம்பித்து விடுகிறார்கள். அதுவும் கோரோனோ காலகட்டம் வந்ததில் இருந்து, எல்லோருமே ஒரு வகையில் யூடியூபர்களாக மாறிவிட்டனர். சூழ்நிலை இப்படி இருக்க, சோலோ க்ரியேட்டர்களுக்கு, ஏற்கனவே ஒரு சில கார்போரேட்டுகள் குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் போட்டி-க்கு நானும் வரலாமா என்று என்ட்ரி கொடுத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத இசை ஜாம்பவானாக இன்றும் மக்கள் நெஞ்சங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷமாக போற்றப்படும் இளையராஜா அவ்வப்போது ஏதாவது பஞ்சாயத்து செய்து விடுவார்.
நீங்களுமா.. என்று புலம்பும் சோலோ க்ரியேட்டர்கள்
இளையராஜா இன்றும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை 1000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இப்படி இருக்க இப்போதெல்லாம் ராயல்டி பிரச்சனையை அடிக்கடி செய்து வருகிறார்.
ஒரு பக்கம் இவரை போட்டு என்ன ரோஸ்ட் செய்தாலும், மறுபக்கம் இவரின் ரசிகர்கள் இளையராஜாவுக்கு பேராதரவை கொடுத்து வருகின்றனர். மேலும் உலகம் முழுவதும் தனது கான்செர்ட்டில் பிஸியாக இருக்கும் இளையராஜா தற்போது சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார்.
இதில் தனது இசைக்கோர்ப்புகளையும், பாடல்களையும், பின்னணி இசை, இசை கச்சேரி, சிம்பொனி என அனைத்தையும் வெளியிடவுள்ளார். இனி பாத்து தான் சின்ன மியூசிக்கை கூட யூஸ் பண்ணனும். இல்லனா காப்பிரைட் தான்.