வெள்ளிக்கிழமை, நவம்பர் 1, 2024

இவங்களுக்குள்ள இப்படி ஒரு உறவா.! ரஜினிக்காக விரதம் இருந்த கனவு கன்னி

பான்-இந்தியா என்ற சொல் கண்டுபிடிக்கப்படுவதற்கு பல தசாப்தங்களுக்கு முன்பே, நடிகை ஸ்ரீதேவி, பான் இந்தியா ஸ்டாராக வலம் வந்தவர். இவருக்கென்று இன்றளவும் ரசிகர் பட்டாளங்கள் உள்ளன. ஒரு காலத்தில் ராஜின் கமலுடன் போட்டி போட்டு நடித்தவர். இருவருடனும் இவரது காம்போ சிறப்பாக இருக்கும்.

ஒரு கட்டத்துக்கு மேல் பாலிவுட்-க்கு சென்ற ஸ்ரீ தேவி, அங்கேயே தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். சில வருடங்களுக்கு முன் இவர் இறந்தபோது கூட சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாகவே இருந்தது.

இந்த நிலையில், இவர் கமல் மற்றும் ரஜினியுடன் நடிக்கும் காலத்தில், இருவருடனும் கிசுகிசுக்க பட்டார். மேலும் ரசிகர்கள் ஐவரும் கமல்ஹாசனும் திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினார்கள். ஆனால் ஆரம்பம் முதலே இருவரும் நல்ல நண்பர்கள்.

ரஜினிக்காக விரதம்

ரஜினிகாந்த் ஸ்ரீதேவி இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர், சரியாக சொல்லவேண்டும் என்றால் 18 படங்கள் ஒன்றாக நடித்துள்ளனர். ஸ்ரீதேவி, ரஜினிக்கு இடையே சினிமாவை தாண்டி பல ஆண்டுகளாக நல்ல நட்பு நீடித்து இருந்தது.

சொல்லப்போனால் இருவரும் காதலித்தார்கள், ரஜினி பெண் கேட்டு வீட்டுக்கு கூட சென்றார். ஆனால் அந்த நேரத்தில் கரண்ட் போனதால் அபசகுனம் என்று திருமணம் நின்றுவிட்டது என்ற கதையெல்லாம் கூட உண்டு. இப்படியான பேச்சுக்கள் இருந்த காலகட்டத்தில், கடந்த 2011-ஆம் ஆண்டு, ராணா படத்தின் படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாகவே இருந்தது. அந்த நேரத்தில், ரஜினிகாந்த் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்த ஸ்ரீதேவி, அவருக்காக 7 நாள் உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் விரதம் இருந்தாராம். மேலும், புனேவில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று பிரார்த்தனையும் செய்துள்ளார்.

இதை கேள்விப்பட்ட ரசிகர்கள், “அப்போ இது காதல் தானே..” என்றும் விமர்சித்தனர். எது எப்படியாக இருந்தாலும், காலம் கடந்துவிட்டது, இருவருக்கும் குழந்தை குட்டி என்று ஆகிவிட்டது.. இனி எதற்கு என்று, ஹாய் பை என்று இருந்துள்ளனர்.

- Advertisement -spot_img

Trending News