வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பெரிய ஆபத்துன்னு பச்சைக்கொடி காட்டிய லோகேஷ்.. ரஜினிக்கு டாட்டா போட்டுட்டு செய்ய போகும் காரியம்

கூலி படத்தில் பிஸியாக வேலை செய்து கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அடுத்தடுத்து பெரிய பெரிய நடிகர்களிடமிருந்து அழைப்பு வந்தாலும் எல்லாத்தையும் ஒத்தி வைத்துள்ளார். ஏற்கனவே இரண்டு படங்கள் கமிட் செய்து வைத்துள்ளார். இதற்கு மேலேயும் அந்த படங்களை இயக்கவில்லை என்றால் மக்கள் மறந்து விடுவார்கள் என அதற்கு அடி போடுகிறார்.

தமிழ் ஹீரோக்கள் மட்டும் இல்லாமல் சல்மான் கான், அல்லு அர்ஜுன், ராம்சரண் என எல்லா ஹீரோக்களும் லோகேஷ் கனகராஜ் இடம் பேசி வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் இப்பொழுது படம் பண்ண போவதில்லை என்று ஏற்கனவே வெளிவந்த இரண்டு படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்க போகிறார்.

கூலி படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்துவிட்டு ரஜினிக்கு பிரியாவிடை கொடுக்கிறார். அடுத்தபடியாக ஏற்கனவே 2019ஆம் ஆண்டு வெளிவந்த கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போகிறார். அடுத்த லோகேஷின் ப்ராஜெக்ட் இதுதான். இதற்கு மேலேயும் இந்த படத்தை எடுக்கவில்லை என்றால் மக்கள் மறந்து விடுவார்கள் என கைதி 2 படத்தை கையில் எடுத்து விட்டார்

கைதி இரண்டாம் பாகம் படத்திற்கு பின்னர் கமல் நடிப்பில் உருவான விக்ரம் படத்தில் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போகிறார். இதற்கு பெயர் “விக்ரம் ரிட்டன்ஸ்” என்று கூட வைத்து விட்டார். ஏற்கனவே விக்ரம் படம் வெளிவந்து அதிரடி ஹிட்டானது. கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் மீண்டு வருவதற்கு லோகேஷ் கனகராஜின் விக்ரம் படம் அடித்தளமாக அமைந்தது.

கைதி 2, மற்றும் விக்ரம் ரிட்டன்ஸ் இந்த இரண்டு படங்களையும் முடித்த பின்பு தான் அடுத்தடுத்த ப்ராஜெக்ட் என திட்டவட்டமாய் இருக்கிறார். கூலி இந்த வருடம் டிசம்பர் மாதத்தோடு படபிடிப்பு முடிகிறது. இந்த படத்தை அடுத்த வருடம் தமிழ் புத்தாண்டுக்கு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News