வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

நாலா பக்கமும் சூர்யாக்கு சாத்தப்படும் சட்டர்.. தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்ட கங்குவா 

வணங்கான் படத்தில் தொடங்கிய பிரச்சனை இன்று வரை சூர்யாவை எழவிடாமல் அடுத்தடுத்த கதவுகளை மூடிக்கொண்டே வருகிறது. ஏற்கனவே புறநானூறு படம் , மேலும் ஒரு கன்னட படம், ஹிந்தி படம் என தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் டிராப்பானது. இப்பொழுது சூர்யா பெரிதும் கங்குவா படத்தை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிறார்.

 கங்குவா படமும் முழுவதுமாக சூட்டிங் முடிந்துவிட்டது. கடந்த அக்டோபர் 10 ஆயுத பூஜைக்கு இந்த படம் ரிலீஸ் செய்ய நாள் பார்த்தனர். ஆனால் சூப்பர் ஸ்டார்  நடிப்பில் வெளியே வந்த  வேட்டையன் படம் அதே நாளில் ரிலீஸ் ஆனதால் கங்குவா பின்வாங்கியது. இப்படி சூர்யா நம்பி இருந்த கங்குவா படத்திற்கும் முதல் முதலாக தடை ஏற்பட்டது.

 இப்பொழுது நவம்பர் 14ஆம் தேதி கங்குவா படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கு பிரம்மாண்டமாக ஒரு ஆடியோ லான்ச் நடைபெற்றது. ஆனால் அந்த நிகழ்ச்சி  நடைபெற்றது கூட யாருக்கும் தெரியவில்லை. அதற்கு காரணம் விஜய் கட்சியின் டி வி கே மாநாடு தான். அக்டோபர் 26 ஆம் தேதி கங்குவா படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது.

 விஜய் நடத்திய மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது. எல்லா மீடியாக்களும் ஒட்டுமொத்தமாக விஜய் மாநாட்டை எதிர்நோக்கி இருந்தனர் அதனால் கங்குவா படத்தின் ஆடியோ லான்ச் எடுபட வில்லை. இப்படி தப்பான ஒரு நாளை தேர்ந்தெடுத்து தனக்குத்தானே மண்ணை வாரி போட்டுள்ளனர் படக் குழுவினர்.

 இது ஒரு புறம் இருக்க ஆடியோ வெளியீட்டு விழாவில் சூர்யா கிட்டத்தட்ட தன்னை ஒரு விஜய் போலவே காட்டிக் கொண்டார். விஜய் காட்டும் மேனலிசம் போலவே சூர்யா அந்த விழாவில் நடந்து கொண்டார். குறிப்பாக விஜய் போல் அமைதியாக இருந்தார், விஜய் இடத்தை  எப்படியும் பிடித்து விடலாம் என அவர் செய்கை ஒவ்வொன்றும் இருந்தது. 

Trending News