கோட் மற்றும் லப்பர் பந்து இரண்டு படங்களும் ஓ டி டி யில் ரிலீஸ் ஆகிவிட்டது. ஆனால் இப்பொழுதும் இரண்டு படங்களும் தியேட்டரிலும் ஓடிக்கொண்டு வசூல் சாதனை செய்து வருகிறது. ஒரு சின்ன படம் ஓ டி டி மற்றும் தியேட்டரில் ஓடுவது என்பது ஒரு உண்மையான வெற்றி சாதனை.
அடுத்தடுத்து லப்பர் பந்து இயக்குனருக்கு பல பெரிய ஹீரோக்கள் வலை வீசி வருகிறார்கள். வெறும் ஐந்து கோடிகளில் எடுக்கப்பட்ட இந்த படம் இன்று 40 கோடிகள் வசூலித்து ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இருவருக்கும் மார்க்கெட் எகிரியுள்ளது.
இந்த படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து தான், இப்பொழுது நிறைய ஹீரோக்களின் தேடல் லிஸ்டில் இருக்கிறார். இயக்குனர் தமிழரசன் அடுத்து ஆகாஷ் பாஸ்கரின் டான் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் பண்ணுகிறார். ஏற்கனவே இந்த நிறுவனம் தனுஷ் நடிக்கும் இட்லி கடை படத்தை தயாரித்து வருகிறார்.
இந்த நெருக்கத்தின் காரணமாக தமிழரசன் பச்சை முத்து அடுத்த படம் தனுசை வைத்து இயக்குகிறார். ஏற்கனவே தனுஷ் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது, இந்த வரிசையில் டான் பிக்சர்ஸ் நிறுவனமும் அவரை வளைத்துள்ளது. இட்லி கடை படத்துக்கு பிறகு தனுஷ் இந்த இயக்குனருக்கு படம் பண்ணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லப்பர் பந்து இன்னும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் கோட் படத்தைப் போல இரண்டு காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் ரிலீஸ் ஆகியும் கூட இந்த இரண்டு படங்களின் சாதனையை முறியடிக்க வில்லை. தொடர்ந்து வசூல் வேட்டை ஆடி வருகிறது லப்பர் பந்து.