விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சினிமாவில் இருந்து அரசியலில் நுழைந்து புதிய கட்சி ஆரம்பித்து ஜெயித்தவர்களில் என்.டி.ஆரும், எம்.ஜி.ஆரும், விஜய்காந்தும், பவன் கல்யாணும்தான் வெற்றி பெற்றவர்கள். அந்த வரிசையில் களமிறங்கிய கமல், டி.ராஜேந்தர், கார்த்திக் எல்லாம் தேர்தல் நேர அரசியல் கட்சிகளாக மாறிவிட்டனர்.
ஆனால், விஜய் தன் சினிமா கேரியரின் பீக்கில் இருக்கும் போதே 200 கோடி ரூபாய் சம்பளம் ஒரு படத்திற்கு கிடைத்தாலும் அதை உதறிவிட்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சியை நடத்திவருகிறார். இக்கட்சி தொடங்கி 8 மாதங்கள் ஆகும் நிலையில், கொடியும், கொடிப்பாடலையும் அறிமுகம் செய்த பின், கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி முதல் மாநாட்டை நடத்தினார்.
இம்மாநாட்டை பற்றியே, அனைத்து அரசியல் கட்சிகளும், மீடியாக்களும், யூடியூப் சேனல்களிலும் விவாதிக்கப்பட்டது. விஜய் சொன்னபடியே கட்சி ஆரம்பித்து,தன் பலத்தை அம்மாநாடு மூலம் நிரூபித்துவிட்ட நிலையில், அடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, கட்சியை பலப்படுத்த கோவையில் இருந்து சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார்.
விஜய்யின் தமிழ்த் தேசிய அரசியல் பற்றியும் அவது தவெகவின் கொள்கை பற்றி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சித்த நிலையில், இன்று விஜய் தன் கட்சி நிர்வாகிகளுடன் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 26 தீர்மானங்கள்
இதில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், மாநாட்டுக்கு வரும் போது உயிரிழந்த நபர்களுக்கு இரங்க. தீர்மானம், ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம், ஜாதி வாரி கணக்கெடுப்பு பணியை மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில் மத்திய அரசை காரணம் காட்டும் தமிழக அரசுக்கு கண்டனம், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியை மா நிலப் பொதுப்பட்டியலில் வழங்க வேண்டும், மின்சார கட்டணத்திற்கு மாதம் ஒருமுறை கணக்கெடுப்பு செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, தற்போது வரை அதை நிறைவேற்றாத தமிழக அரசுக்கு கண்டனம்.
2 பாராட்டு தீர்மானங்கள்
கால நிர்ணயம் செய்து மதுக் கடைகளை மூட வேண்டும், அத்துடன் ஈழத் தமிழர் பிரச்சனை, மீனவர் பிரச்சனைகளுக்கும் இச்செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், திமுக, பாஜகவை கடுமையான விமர்சித்து, கண்டித்து, எதிர்த்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும், 2 பாராட்டு தீர்மானங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
அதில், தமிழக அரசின் தகைசால் விருது அறிவிப்பு மற்றும் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. விஜய் மற்றவர்கள் மாதிரி இல்லாமல், பேச்சு மட்டுமின்றி செயலிலும் இறங்கியுள்ளதாக அனைவரும் பாராட்டி வருகின்றனர்.