சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கங்குவா. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், திஷா பதானி, யோகி பாபு, நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.
ஆனால், ரஜினியின் வேட்டையன் படத்துக்கு வழிவிட்டு வரும் நவம்பர் 14 ஆம் தேதி கங்குவாவை தனிக்காட்டு ராஜாவாக வெளியிடுவதாக படக்குழு அறிவித்தனர். வேட்டையன் படமே கலவையான விமர்சங்களைப் பெற்ற நிலையில் அப்போது வந்திருந்தாலே கங்குவா நிச்சயம் டாப் கிளாஸில் ஜெயிச்சிருக்கலாம் என ரசிகர்கள் கூறினர்.
இந்த நிலையில், கங்குவா பட ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படக்குழுவினர் தீவிர புரமோசன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இப்படம் தமிழ் சினிமா வசூலில் பென்ச் மார்க்காக இருக்க வேண்டி சூர்யா, சிவா உள்ளிட்ட அனைவரும் தீயாக இறங்கி அனைத்துப் பகுதிகளிலும், மாநிலங்களிலும், யூடியூப்களிலும், மீடியாவிலும் புரமோசன் செய்து, இப்படத்திற்கு விளம்பரம் செய்து வருகின்றனர்.
இப்படம் 2000 கோடி வசூலிக்கும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும், இப்படத்தின் 2 காலக்கட்டத்தில் நடக்கும் கதை என்பதால் சூர்யா 2 கேரக்டரில் நடித்திருப்பதாக இயக்குனர் சிவாவும் கூறினர். இந்த நிலையில், இப்படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யா, ஏற்கனவே அவர் நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தை ஓடிடியில் வெளியிட்டது என் தவறு என்று தெரிவித்துள்ளார்.
ஓடிடி ரிலீஸூம் ரசிகரின் ஏமாற்றமும்- சூர்யாவின் விளக்கம்
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது; ”சிவா இயக்கிய அண்ணாத்த திரைப்படத்தை தியேட்டருக்குச் சென்று பார்த்திருந்தேன். அப்படத்தைப் பார்த்துவிட்டு வெளியே நான் வந்தபோது, ஜெய்பீம் படத்தின் டிக்கெட் பற்றி ஒரு முதியவர் விசாரித்துக் கொண்டிருந்தார். நான் அவரிடம், இப்படம் தியேட்டரில் வெளியாகவில்லை, ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது என்று கூறினேன். ஆனால் அவரால் நான் கூறியதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
அப்போதுதான் ஜெய்பீம் படத்தை தியேட்டரில் வெளியாடமால் ஓடிடியில் வெளியிட்டது என் தவறு என்று தோன்றியது. அப்படம் ஓடிடியில் ரிலீசானதால் அனைத்து மக்களையும் சென்று சேரவில்லை”என்று தெரிவித்துள்ளார். ஜெய்பீம் படம் சூர்யாவின் கேரியரில் சிறந்த படமாக அமைந்ததாக சினிமா விமர்சகர்களும், ரசிகர்களும் கூறிய நிலையில், இப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.