வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

விக்ரமனை தொடர்ந்து பிரதீப் ஆண்டனியின் திருமணம்.. ஜோடி பொருத்தம் சூப்பர் 

Pradeep Antony: சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கு பெற்ற விக்ரமனின் திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று பிரதீப் ஆண்டனியின் திருமணமும் சத்தமே இல்லாமல் சில பிக் பாஸ் பிரபலங்கள் முன்னிலையில் நடந்த முடிந்துள்ளது. 

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான போட்டியாளர் தான் பிரதீப் ஆண்டனி. இவருக்கு ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்திருந்தனர். மேலும் அந்த சீசனை பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த சில பெண் போட்டியாளர்களால் பிரதீப்புக்கு கமலால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.

pradeep-pooja
pradeep-pooja

இந்த சூழலில் கமலுக்கு எதிராகவும், பிரதீப்புக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரதீப் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார். இவ்வாறு பல சர்ச்சையான விஷயங்களை பிரதீப் சந்தித்து இருக்கிறார்.

இந்நிலையில் தனது காதலி பூஜாவை இன்று கிறிஸ்தவ முறைப்படி பிரதீப் கரம்பிடித்து இருக்கிறார். அதுவும் இதில் என்ன ஸ்பெஷல் என்றால் நவம்பர் முதல் வாரத்தில் பிரதீப் ரெட் கார்ட் வாங்கிய நிலையில் அவரது திருமணமும் நவம்பர் முதல் வாரத்தில் நடந்துள்ளது. 

pradeep-antony
pradeep-antony

அதோடு இன்று கமலின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரதீப் ஆண்டனி திருமண விழாவில் சுரேஷ் சக்கரவர்த்தி கலந்து கொண்டுள்ளார். இப்போது பிரதீப் ஆண்டனி மற்றும் பூஜா திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. 

இதைப் பார்த்த பல பிரபலங்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கவினின் நெருங்கிய நண்பனான பிரதீப்பின் திருமணத்தில் அவர் பங்கு பெறவில்லையே என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை விரைவில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தினால் அதில் சினிமா பிரபலங்கள் மற்றும் பிக் பாஸ் பிரபலங்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

pradeep-suresh
pradeep-suresh

Trending News