வெள்ளிக்கிழமை, நவம்பர் 8, 2024

நவீன ஐமேக்ஸ் தொழில்நுட்பம்.. புதிய படத்தில் மிரட்ட வரும் ஸ்பைடர் மேன் பட ஹீரோ கிறிஸ்டோபர்!

பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் புதிய ஐமேக்ஸ் தொழில் நுட்பத்தை பயன்படுத்தப் போவதாக வெளியாகும் தகவல் ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

21 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இயக்குனரும், பிரிட்டிஷ் & அமெரிக்க திரைப்பட இயக்குனருமான நோலன் தனது சிக்கலான கதை சொல்லலூடிய திரைக்கதைப் படமாக்கலுக்காக அறியப்படுகிறார். இவரது திரைமொழி எல்லோராலும் பாராட்டப்பட்டு, ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே இவரது பல படங்கள் உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்துள்ளன.

ஃபாலோயிங் படத்தின் மூலம் அறிமுகமான இவர், மெமோண்டோ, இன்சோம்னியா, தி டார்க் நைட், இன்செப்டன், இண்ட்ர்ஸ்டெல்லர், டன்கிர்ல், டெனட் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மற்ற முன்னனி இயக்குனர்கள் இதுவரை செய்யாத பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டு, தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி திரைத்துறையில் பல ஆண்டுகளாக பல இயக்குனர்களுக்கு முன் மாதிரியாக உள்ளார்.

கடந்த ஆண்டு ஜுலை 21 ஆம் தேதி இவர் இயக்கத்தில் ராபர்ட் ஓப்பன்ஹஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இவர் இயக்கத்தில் சில்லியன் மர்பி நடிப்பில் உருவான படம் ஓபன்ஹெய்மர். இப்படம் 100 மில்லியன் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட உலகம் முழுவதும் 977 மில்லியன் டாலர் வசூலித்து சாதனை படைத்தது.

இப்படம் ஆஸ்கர் விருதுக்கு 13 பிரிவுகளின் கீழ் இடம்பெற்ற நிலையில், சிறந்த இயக்குனராக முதன் முறையாக கிறிஸ்டோபர் நோலன் ஆஸ்கர் வென்றார். அதேபோல், இப்படத்தின் நடித்த சிலியன் மர்ஃபியும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் வென்றார். எனவே அடுத்து நோலன் இயக்கும் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நவீன ஐமேக்ஸ் டெல்னாலஜியில் புதிய படம்!

இந்த நிலையில், ஒவ்வொரு படத்தும் வித்தியாசம் காட்டி அசத்தும் நோலன் அடுத்து இயக்கவுள்ள புதிய படத்தில் நவீன ஐமேக்ஸ் டெல்னாலஜியை பயன்படுத்தவுள்ளார். அதன்படி, ஸ்பைடர்மேன் படத்தில் நடித்த டாம் ஹாலண்ட் மாட் டாமன் இப்புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஒரு ஸ்பை திரில்லர் பாணியில் உருவாகவுள்ளது. இப்படம் வரும் 2026 ஆம் ஆண்டு ஜூலையில் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இப்போது இப்பட வேலைகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில், நவீன ஐமேக்ஸ் தொழில் நுட்பத்தில் இப்படம் திரைக்கு வரும் என வெளியாகும் தகவல் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான 2. 40. 1 இல்லாமல் 1. 90.1 என்ற ரீதியில் அகலமான பெரிய திரையுடையதுதான் ஐமேக்ஸ். வழக்கமான படத்தைவிட இந்தக் கேமராவில் படப்பிடிப்பு செய்ய கூடுதல் செலவு ஆகும்.

கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியாகி ஆஸ்கர் விருது வென்ற ஓப்பன்ஹெய்மர் படம் 70 எம்.எம் ஐமேக்ஸ் பயன்டுத்தப்பட்டது. இது பலராலும் பாராட்டப்பட்ட நிலையில் அடுத்து புதிய ஐமேக்ஸ் தொழில்நுப்டத்தை பயன்படுத்தவுள்ளர் நோலன். இதை மற்ற இயக்குனர்களும் பயன்படுத்தலாம் என தெரிகிறது.

- Advertisement -spot_img

Trending News