செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 3, 2024

Gym-களில் பெண்களுக்கு ஆண் டிரெயினர் இருக்கக் கூடாது.. மகளிர் ஆணையம் உத்தரவு

நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுக்க, அரசு, பெண்கள் பாதுகாப்பு அமைப்புகளும், மகளிர் ஆணையம் தொடர்ந்து பல்வேறு விசயங்களைச் செயல்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், உத்தரபிரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், அங்கு, பெண்களின் பாதுகாப்புக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே உ.,பி.,-ல் பெண்கள், கல்லூரி மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளிடம் தொந்தரவு செய்கின்ற நபர்களைப் பிடிப்பதற்காக ரோமியொ ஸ்குவாட் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அங்கு பெண்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வேலைக்கும், பள்ளிக்கும், கல்லூரிக்கும் சென்று வருவதாக கூறப்படுகிறது. அரசின் இம்முயற்சிக்கும் பாராட்டுகள் குவிந்தன.

ஆண் பயிற்சியாளர்கள் இருக்க கூடாது!

இந்த நிலையில், தற்போது, ஜிம், யோகா உள்ளிட்ட பயிற்சி மையங்களில், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அப்பயிற்சி மையங்களுக்கு பெண்கள் வந்தால் அவருக்கு பெண் பயிற்சியாளர்தான் ட்ரெயினிங் கொடுக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பெண்கள், மாணவிகள் ஜிம் உள்ளிட்ட பயிற்சி மையங்களுக்கு பயிற்சிக்கு வந்தால் ஆண் டிரெயினர்கள் பயிற்சி அளிக்கக் கூடாது. குறிப்பாக அவர்களுக்கு அசெளகரியம் ஏற்படாத வகையில் ஆண் ட்ரெயினர்களும் வைக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிப் பேருந்துகளில் கட்டாயம் பெண் பாதுகாவலர்கள் இருக்க வே ந்டும். வணிக வளாகங்கள், கடைகளிலும் பெண்களுக்காக பகுதியில் பெண்களையே நியமிக்க வேண்டும் என உத்தரபிரதேச மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆதரவும் எதிர்ப்பும்

உ.பி.,-ல் இந்த புதிய உத்தரவுகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், இதற்கு பலரும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் கூறி வருகின்றனர். குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசுடனும், பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடமும் ஆலோசனை நடத்தி இம்மாதிரி புதிய திட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் செயல்படுத்தலாம் எனக் கூறி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News