வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

12 வருசமா ஆண்டு அனுபவிச்ச காரை மண்ணுல குழிதோண்டிப் புதைச்ச விவசாயி.. இதெல்லாம் ரொம்ப ஓவரு.. பொங்கும் நெட்டிசன்கள்

கையில காசு இருந்தா கண்ணு மண்ணு தெரியாதுன்னு சொல்வாங்க அதுமாதிரி தாங்க இப்ப ஒரு சம்பவம் நடந்திருக்கு. அதாவது 12 வருசமாக யூஸ் பண்ணிட்டு இருந்த காரை ஒருத்தரும் பூமியில புதைச்சிருக்காருங்க. இதைப் பார்த்த நம்ம பையங்க எல்லாம் ஒரு காரை வாங்கறதே எவ்ளோ கஷ்டம் அதுலையும் நீ காரை குழி தோண்டி மண்ணுக்குள்ள வேற புதைச்சிருக்கியான்னு கயா முயான்னு சோசியல் மீடியாவுல கருத்து தெரிவிச்சிட்டு இருக்காங்க. வாங்க அது என்னன்னு முழுசா பாப்போம்.

கடந்த 2016 ஆம் வருசத்துல பிரேசில சேர்ந்த ஒருத்தரு 10 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிருக்கிற தன்னோட பெண்ட்லி காரை மண்ணுல புதைக்கிறதே விளம்பரம் பண்ணுனாரு. அதாவது அவர் செத்ததுக்கு அப்புறமா அந்தக் காரு அவருக்கு பயன்படும்னு அவருக்கு நினைச்சிட்டு இதை விளம்பரம் செஞ்சாரு.

இதைப் பார்த்த மீடியா காரங்க, நீங்க என்ன பைத்தியமான்னு அவருகிட்டையே கேட்டுட்டாங்க. அவரு அறிவிச்ச மாதிரி சரியா அந்த நாளும் வந்துச்சு. ஊரே திரண்டு பொறாமையில பொங்கி எழுந்து அந்தக் காரை பொதைக்காதயா. என சகட்டு மேனிக்கு திட்டித் தீர்த்தனர் அவரை.

கடைசி நேரத்துல அவரும் ’’இப்படி யாராவது முட்டாள் தனத்த பண்ணுவாங்கலா? நான் உங்க எல்லாருக்கும் உண்மை உணர்த்தத தான் உங்கள இங்க வரவைச்சே. ஏன்னா, இந்தப் 10 லட்ச யூ.எஸ். டாலர் காரை மண்ணுல பொதைக்கிறதுக்கே இப்டி பொங்கறீங்க, ஆனால் உங்க உடம்புல இருக்கிற விலை மதிக்கமுடியாத உறுப்புகள யாரும் பிரயோஜன படாமல் அதுக்குள்ளதான பொதைக்கிறீங்கன்னு’’ கேள்வி கேட்டாரு. எல்லாரும் அவரோட சாமத்தியத்தையும் புத்தியாசலித்தனத்தையும் பாராட்டுனாங்க.

Wagon R காரை குழிதோண்டி புதைத்த நபர்

பிரேசில்ல யாவதும் விளம்பரத்துக்காகத்தான் அப்படி நடந்துச்சு. ஆனா, நம்ம இந்தியாவுல ஒரு சம்பவம் உண்மையா நடந்துருக்கு. அதாவது, குஜராத்துல 12 ஆண்டுகளா தான் பயன்படுத்தி வந்த காரு, ரொம்ப அதிர்ஷ்டமாக நினைச்சிருக்காரு மனுஷன். ஆனால் அந்தக் காரு 12 வருமாச்சே அதனால் அதை விற்கவும் மனசு வரல, யாருக்கும் கொடுக்கவும் மனசு வரல.

அதுனால அவரு, 15 அடிக்கு ஆழமுள்ள குழி தோண்டி, தன் அதிஷ்ட காரான Wagon R காரை தன் குடும்பத்துடன் சேர்த்து புதைச்சு அதுக்கு இறுதிச் சடங்குகளும் பண்ணீருக்காரு அந்த விவசாயி. இதில என்ன கொடுமையினா. இந்த நிகழ்ச்சியில ஏராளமானவங்க பங்கேற்றாங்கலாமா. இந்த சம்பவத்துக்கு பலரும் விமர்சனம் தெரிவிச்சிட்டு வராங்கா. இதை அடக்கம் செய்யரதுக்கு பதிலா யாருக்காவது கொடுத்து உதவியிருக்கலாமே. இதெல்லாம் ரொம்ப ஓவரு என என அவரது அறியாமை நினைத்து பலரும் சமூக வலைதளத்துல பதிவிட்டுட்டு வராங்க. அதேசமயம் அந்தக் காரு காற்று மாசுபாடு இருக்கறதாலதான் அவரு இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கலாம்னு சொல்றாங்க.

Trending News