சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

அப்பட்டமான தவறு பண்ணிட்டீங்க விஜய்.. சர்ச்சையான பதிவு போட்ட விஜய் டிவி பிரபலம்

Vijay: விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு நடந்த பிறகு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. விஜய்க்கு ஆதரவாகவும், விஜய் இதெல்லாம் பேசி இருக்கக் கூடாது எனவும் பலதரப்பட்ட பிரபலங்கள் விமர்சித்து வருகிறார்கள்.

அதிலும் சின்னத்திரை நடிகர் போஸ் வெங்கட் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் போன்றோரின் விமர்சனங்கள் மக்களே வேறுபடையும் அளவுக்கு இருந்தது. இந்த நிலையில் இயக்குனரும் விஜய் டிவியின் சொல் விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய வருமான ஜேம்ஸ் வசந்த் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

அதில்,அரசியல் பின்புலமே இல்லாமல், அதில் ஒரு ஈடுபாடு இருக்கிறதென்பதை சூசகமாகக் கூட மக்களுக்குச் சொல்லாமல், சடாரென குதித்த விஜய்தான் அண்மைக்காலத் தமிழக அரசியல் விவாதப் பொருள்.

அப்பட்டமான தவறு

இவர் ஏன் வரவேண்டும்? இங்கில்லாத எதை இவர் வந்து தரப்போகிறார்? என்ன மாற்றத்தைக் கொண்டுவந்துவிடுவார்? இவைதான் வாக்களார்கள் மனதிலுள்ள கேள்விகள். விடைகளுக்காகக் காத்திருக்கின்றனர். இதனால் அவருடைய ஒவ்வொரு சொல்லும் செயலும் கூர்ந்து கவனிக்கப்படுகின்றது. இதை விஜய்யும் அறிவார்.

இருந்தும் ஒரு தவற்றை இவ்வளவு தொடக்கத்திலேயே செய்தது மக்களை சிந்திக்க வைத்திருக்கிறது.
அன்புமணி ராமதாஸ் இரண்டாம் தலைமுறை அரசியல்வாதி. சில சூழல்களில் அரசியல் பார்வையின் வழியாக சில திரைப்படங்களைக் கூட எதிர்த்தவர்கள் அவர்கள்.

திரைப்பட நாயகர்களையும் விமர்சித்தவர்கள். விஜய்க்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
இருந்தும், அண்மையில், அவரைத் தொலைபேசியில் அழைத்து பிறந்த நாள் வாழ்த்துச் சொல்கிறார். நல்ல விஷயந்தான்.

இது அரசியல் பண்பு. நேற்று சீமானுக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்கிறார்.
ஆனால், இரு நாட்களுக்கு முன்பு பிறந்த நாள் கொண்டாடிய கமல்ஹாசனுக்குச் சொல்லவே இல்லை. குறிப்பிடும்படியான அவருடைய 70-வது பிறந்த நாள் வேறு!

கமல் உங்கள் துறையின் மூத்த கலைஞர். நீங்கள் பிறக்கும் முன்பே அவர் நடிகர். புதுமைகளுக்கு முன்னோடி. பல்கலை வித்தகர். இந்தியத் திரைப்படத்துறையின் உயர்ந்த கலைஞரில் ஒருவர். எல்லாராலும் பெரிதும் மதிக்கப்படுகிறவர். இவையனைத்தையும் தாண்டி, ஒரு அரசியல் கட்சித்தலைவர்.

அப்பட்டமான ஒரு தவற்றைச் செய்துவிட்டீர்கள், விஜய்!. நீங்கள் என்ன காரணம் சொன்னாலும், அதை ரசிகர்களும், வாக்காளர்களும், பொதுமக்களும் ஏற்கப் போவதில்லை என்று எழுதி இருக்கிறார். பல தரப்பட்ட அரசியல் தலைவர்களுக்கு வாழ்த்து சொல்லி வரும் விஜய் கமலஹாசனை மட்டும் கண்டுகொள்ளாமல் விட்டது ஏற்கனவே பெரிய பேசு பொருளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

Trending News