TTF வாசன், கூல் சுரேஷ் ரெண்டு பேருமே இல்ல.. இப்படி ஒரு விளம்பரம் தேடுவது ஒரு பொழப்பா!

சர்ச்சைக்கும் டி.டி.எஃப் வாசனுக்கும் எப்படி எந்த நெருக்கமோ தெரியவில்லை. அவர் போகுமிடமெல்லாம் சர்ச்சைகள் வந்து வட்டமடித்துக் கொண்டே இருக்கிறது. பைக்கில் போகும் பொழுது வீடியோ Vlog ஆகப் போட்டவர். அதன் மூலம் பிரபல யூடியூபரானார்.

அதனால் திருவிக பூங்கா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்அம், டிடிஎஃப் வாசனை தன் மஞ்சள் வீரன் படத்தின் ஹீரோவாக ஒப்பந்தம் செய்தார். இதனால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. டிடிஎஃப் வாசனின் ஃபேன்ஸும் சமூக வலைதளங்களில் இதைக் கொண்டாடித் தீர்த்தனர். இப்படத்தின் முதல் போஸ்டரும் வெளியாகி வைரலானது.

சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் ஆசையிலும் கனவிலும் இருந்தார் டிடிஎஃப் வாசன். ஆனால், யார் கண்பட்டதோ எவர் சொல் பட்டதோ தெரியவில்லை. பைக் ஸ்டண்ட் மூவம் சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளியே வந்த பின் டிடிஎஃப் வாசனை அப்படத்தில் இருந்து தூக்கினார் செல்அம்.

தன் படத்திற்கு டிடிஎஃப் வாசன் ஒத்துழைப்பு தரவில்லை. அவர் தன்னைச் சுற்றி சர்ச்சைக்குரிய விஷயங்களில் கவனம் செலுத்தி அதையே வீடியோவாக எடுத்து போட்டு கண்டெண்ட் ஆக்குகிறார் என்று இயக்குனர் செல்அம் விளக்கம் அளித்திருந்தார். அதன்பின், டிடிஎஃப் வாசனும் தன் பங்குக்கு இயக்குனரை கண்டபடி திட்டி, வீடியோவும் வெளியிட்டு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி, அவர் புகழ்பெறுவதற்கும் விளம்பரத்திற்க்காக தன்னைப் பயன்படுத்திக் கொண்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.

மஞ்சள் வீரன் படத்தில் புதிய ஹீரோ

இதையடுத்து, மஞ்சள் வீரன் படத்தின் புதிய ஹீரோவாக கூல் சுரேஷ் நடிப்பார் என்று செல்அம் தெரிவித்தார். அதன்பின், இப்படத்திற்கான ஷூட்டிங் லொகேசன் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அக்டோபர் 15 ஆம் தேதி இப்படத்தின் ஹீரோவை அறிமுகம் செய்யவிருப்பதாக தெரிவித்தார். ஆனால் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், வரும் நவம்பர் இறுதியில் மஞ்சள் வீரன் படத்தின் புதிய ஹீரோவை மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகும் என செல்அம் தெரிவித்துள்ளார். மேலும், எதையும் தாங்கும் மன வலிமை உள்ள ஒரு மாவீரனை தான் மஞ்சள் வீரன் படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தப் போவதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

இவங்களுக்கு இதே வேலையா போச்சு

ஏற்கனவே டிடிஎஃப் வாசன் போய் கூல் சுரேஷ் மஞ்சள் வீரன் படத்திற்குள் வந்தார். இப்போது இவர்கள் இருவரும் இல்லை வேறொரு புதிய ஹீரோவை அறிமுகம் செய்யப் போவதாக செல்அம் கூறியுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கதைக்குரிய ஹீரோவை தேர்வு செய்துவிட்டு அறிவிக்க வேண்டியதுதானே ஏன் திட்டமிடாமல் இப்படி செய்ய வேண்டும்? இவங்களுக்கு இதே வேலையா போச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர். பாகுபலி ரேஞ்சுக்கு ஓவர் பில்டப் செய்து விளம்பரம் தேடிக் கொள்வதெல்லாம் ஒரு பொழப்பா என்று நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

Leave a Comment