Memes: சென்னை மக்கள் எல்லோரும் இப்போது உஷாராக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பருவமழை தொடங்கிய நிலையில் நேற்று இரவிலிருந்து அடைமழை வெளுத்து வாங்குகிறது.
அடுத்தடுத்த நாட்களில் இது தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காலையிலேயே மழை அதிகமாக இருந்த நிலையில் அனைவரும் டிவி முன் ஆஜராகி விட்டனர்.
ஆனால் போன முறை மாதிரி ஆகிவிடக் கூடாது என்பதற்காக நியூஸ் சேனல்களில் சென்னையில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என செய்திகள் வந்தது. இதனால் நொந்து போன மாணவர்கள் ஸ்கூலுக்கு கிளம்ப தொடங்கினர்.
மழையில் ரெயின் கோட் குடை பிடித்துக் கொண்டு பள்ளிக்கு செல்லும் வழியில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இப்படி சென்னையில் இன்று மழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
ஆனாலும் வேலைக்கு செல்பவர்கள் நமக்கெல்லாம் லீவு கிடையாதா என்ற நினைப்போடு கிளம்பிவிட்டனர். மேலும் சென்னை மழை பற்றிய மீம்ஸ் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
எப்படியோ ரெயின் கோட் வாங்கிட்டோம். அதுக்காகவாவது ரெண்டு நாளைக்கு மழை வரணும் கடவுளே என சிலர் அவசர வேண்டுதல் வைத்து வருகின்றனர். அதே சமயம் மாணவர்கள் இன்னும் ஒரு வாரம் மழை வந்தால் ஸ்கூலுக்கே போக வேண்டாம் என யோசிக்கின்றனர்.
இன்னொரு பக்கம் இல்லத்தரசிகள் டீ போண்டா பஜ்ஜி என மழையை என்ஜாய் செய்ய தொடங்கிவிட்டனர். ஆனால் கணவர்கள் தீபாவளி செலவையே இன்னும் சரி பண்ணல. அதுக்குள்ள சிலிண்டர் விக்கிற விலைக்கு காலி பண்ணிடாத என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இப்படியாக தற்போதைய மழை பல்வேறு மனநிலையை கொடுத்து வருகிறது. அதில் இணையத்தில் நம்மை ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கும் சில மீம்ஸ் இதோ.