வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

3 வருட காத்திருப்பை பூர்த்தி செய்தாரா சூர்யா.? கங்குவா படத்தின் பிளஸ் மைனஸ் இதுதான்

Kanguva: சூர்யாவின் ரசிகர்கள் மூன்று வருடங்களாக இந்த ஒரு நாளுக்காக தான் தவம் இருந்தனர். கடந்த மாதமே வெளியாகி இருக்க வேண்டிய கங்குவா பல தடைகளை கடந்து இன்று திரைக்கு வந்துள்ளது.

ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கருணாஸ் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாகவே படத்தின் பிரமோஷன் ஜோராக நடந்து வந்தது. அதன் பலனாக தற்போது படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் கங்குவா படத்தின் நிறை குறை பற்றி இங்கு விரிவாக அலசுவோம்.

கங்குவா படத்தின் நிறை குறைகள்

இப்படத்தின் பிளஸ் என்றால் அது சூர்யா தான். ஃபிளாஷ்பேக் காட்சிகளில் அவருடைய இன்ட்ரோவே பட்டையை கிளப்புகிறது. சிங்கம் போல் கர்ஜிக்கும் அவருடைய தோரணையும் மேக்கப், காஸ்டியூம் என அனைத்துமே தனித்துவமாக இருக்கிறது.

அதேபோல் கடந்த கால காட்சிகள் தான் படத்தை 80 சதவீதம் ஆக்கிரமித்து இருக்கிறது. அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் கிராபிக்ஸ் பக்காவாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அதேபோல் சண்டை காட்சிகளில் அனல் பறக்கிறது.

இறுதியில் இரண்டாம் பாகத்திற்கான குறிப்பை கொடுத்துள்ளனர். அதன் மூலம் கார்த்தியின் கேமியோ அடுத்த பாகத்தில் அவர்தான் வில்லன் என்பதையும் சொல்லி இருக்கிறது. அதே சமயம் அண்ணன் தம்பி இருவரையும் எதிரும் புதிருமாக பார்ப்பதற்கும் ஒரு ஆவல் ஏற்பட்டுள்ளது.

இப்படி படத்தில் பல நிறைகள் இருந்தாலும் சில மைனஸ் விஷயங்களும் இருக்கிறது. அதில் இரைச்சலான பின்னணி இசை கொஞ்சம் அசௌகரியத்தை கொடுத்து விடுகிறது. அதேபோல் படம் தொடங்கிய முதல் 35 நிமிடங்கள் சோதனையாக இருக்கிறது.

கொஞ்சம் கிரிஞ்சாகவும் உள்ளது. அதேபோல் குழந்தைகளின் பெர்பாமன்ஸ் சில கேரக்டர்களின் உருவாக்கம் பலவீனமாக உள்ளது. அது மட்டும் இன்றி சில இடங்களில் திரைக்கதை தடுமாறுவதையும் பார்க்க முடிகிறது.

மேலும் அங்கங்கு செண்டிமெண்ட் காட்சிகளை தெளித்து இருந்தாலும் ஒட்ட முடியவில்லை. இதைத் தாண்டி படம் பார்ப்பவர்களுக்கு சிறந்த அனுபவம் தான் அதில் சூர்யா ரசிகர்கள் மூன்று வருட காத்திருப்பை தீர்க்கும் வகையில் தற்போது படத்தை கொண்டாடி வருகின்றனர்.

Trending News