யாருடா செல்லத்த அழ வச்சது.. ராஷி கண்ணாவுக்கு ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்

நடிகை ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து விஜய் சேதுபதி, ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் நடித்துள்ளார்.

நடிகை ராஷி கண்ணா தொடர்ந்து தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில் விஜய் சேதுபதி, நயன்தாரா, அதர்வா உள்ளிட்டவர்கள் நடித்த இமைக்கா நொடிகள் படம் மூலம் இவரை தமிழில் அறிமுகம் செய்து வைத்தனர். இந்த படம் இவருக்கு மிக சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்த நிலையில் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன், ஜெயம் ரவியுடன் அடங்கமறு உள்ளிட்ட படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

முக்கியமாக திருச்சிற்றமபலம் படத்தில் பெரிதாக ரோல் இல்லாமல் இவர் நடிக்க, அதற்க்கு பிறகு இவருக்கு இங்கு வரவேற்பை கொஞ்சம் குறைத்து கொடுத்தது. ஆனால் “கண்பாஷை பேசினால், நான் என்ன செய்வேன்” என்ற வரியை கேட்டாலே இவர் தான் ஞாபத்துக்கு வருவார்.

காதல் தோல்வியால் உடைந்து போன நடிகை

இந்த நிலையில், சமீபத்தில் இவர் அளித்த ஒரு பேட்டியில், இவர் சொன்ன விஷயம் ரசிகர்களை சோகப்படுத்தியுள்ளது. ராஷி கண்ணா ஒரு நபரை உயிருக்கு உயிராக காதலித்துள்ளார். ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த, இவர்கள் காதல், ஒரு கட்டத்தில் பிரச்சனையில் வந்து முடிந்துள்ளது.

அப்போது, இந்த உறவை மீட்க எவ்வளவோ போராடியுள்ளார் ராஷி கண்ணா. ஆனால் இவர் காதலனோ, எனக்கு பிரேக் அப் செய்தே ஆகவேண்டும் என்று பிடிவாதமாக இருந்துள்ளார். அதனால், ஒரு கட்டத்துக்கு மேல், கெஞ்ச விருப்பமில்லாமல், இவரும் சரி என்று ஒத்துக்கொண்டிருக்கிறார்.

ஆனால் இதனால் மிகுந்த மனஅழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளார். பல நாள் சாப்பிடாமல் அறைக்குள் இருந்தபடியே அழுதிருக்கிறார். அதற்க்கு பின் குடும்பம், நண்பர்கள், மற்றும் சினிமாவால் மீண்டு வந்துள்ளாராம். காதல் நாளே தலை வலி தான்..

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment