கல்லுக்குள் ஈரம் பட த்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை விஜயசாந்தி. அதன்பின் கேங் லீடர், கார்த்தவ்யம் , லாரி டிரைவர் உள்ளிட்ட பல படங்களில் முன்ணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 90 களில் சூப்பர் ஸ்டார்களுக்கு இணையான சம்பளம் வாங்கிய நடிகையாக ஜொலித்தார்.
முன்னணி ஹீரோக்கள் அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடிப்பது மாதிரி இவரும் போலீஸ் வேட த்திலும், அதிரடி சண்டை காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். கடைசியாக சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சரிலேரு நிகேவரு பட த்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் விஜயசாந்தி.
இவர் சினிமாவில் நடிப்பதுடன் அரசியலிலும் கவனம் செலுத்தி வரும் நிலையில், 1998ஆம் ஆண்டு பாஜவில் இணைந்தார். அங்கிருந்து விலகி தெலங்கானா ராஷ்டிர சமிதியில் இணைந்தவர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேந்தார். தேர்தலில் சீட் வழங்கவில்லை எனக் கூறி கடந்தாண்டு அக்கட்சியில் விலகி காங்கிரஸில் இணைந்து பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து விஜயசாந்தி மன்ன் பட த்தில் நடித்திருந்தார். இப்படம் அங்குராக அரலித்து என்ற கன்னட பட த்தை தழுவி எடுக்கப்பட்ட து. இப்பத்தை பி.வாசு இயக்க, இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் அப்போது சூப்பர் ஹிட்.
ரஜினி ஒரு தடவை அடி வாங்கி, என்னை 3 வாட்டி அடிச்சார்- விஜயசாந்தி
சமீபத்தில் மீடியாவுக்கு பேட்டியளித்த விஜயசாந்தி மன்னன் படத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது;
’’மன்னன் படக் கதையைக் கேட்டதும் ரஜினி சார் தான், இப்படத்தில் ரொம்ம நல்ல கேரக்டர், இதில் நீங்க நடிக்கனும் என்று கூறினார். அப்போது நிஜமாலும் தேதி இல்லை. ஆனாலும் நானும் சரி என்றேன். பி.வாசு சார் என்னிடம் கதை கூறினார். எனக்கு எல்லாமே ஓகே. ஆனால் ரஜினி சாரை ஓங்கி அடிக்க வேண்டும். அது பிடிக்கவில்லை. அதுக்கு பதிலாக மாத்திப் பண்ணுங்க என்றேன். அந்த சீனுக்காகவே நடிக்க அப்படத்தில் விருப்பமில்லை. ஆனால் ரஜினி சார் வலியுறுத்தால் நடித்தேன்.
ஷூட்டிங்கில் அவரை அடிக்கும் சீன் வந்தபோது தயங்கினேன். ஆனால் ரஜினி சாரே மேடையில் என்னை அடிக்க கூடிய தகுதி அவருக்கு இருக்கு என்று கூறியிருந்தார். அப்படம் மக்களிடம் நல்ல ஹிட். அதில் இன்னொரு சீனில் அவர் என்னை மூன்று முறை அடிக்க வேண்டும்.
நான் ரஜினி சாரிடம் நான் உங்கள ஒருவாட்டிதான் அடிச்சேன். ஆனால் நீங்க மூன்று வாட்டி என்னை அடிக்கிறீங்களே. பெண்களுக்கு மரியாதை கொடுக்கனும்னு சொல்வீங்களே, இப்ப எங்க மரியாதை இருக்குன்னு நான் கேட்டுட்டேன்’’ என்று கூறிவிட்டுச் சிரித்தார்.
விஜயசாந்தி அப்போதைய லேடி சூப்பர் ஸ்டார் என்பதால் அவரது அனைத்து படங்களும் தெலுங்கிலும் சரி, தமிழிலும் சரி சக்க போடு போட்டன. அதனால் அவரை தங்களின் படங்களில் புக் பண்ண தயாரிப்பாளர்களும் காத்துக் கிடந்தபோதுதான், சூப்பர் ஸ்டாரே மன்னன் படத்தில் அவரை நடிக்க அழைத்து நடிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. இப்படம் படையப்பா பட நீலாம்பரி கேரக்டருக்கு இன்ஸ்பிரேசன் மாதிரி என்பது குறிப்பிடத்தக்கது.