பட்ட அடி அப்படி.. கார்த்திக் சுப்புராஜுக்கு சூர்யா போட்ட கண்டிஷன்

சூர்யா நடிப்பில் உருவான கங்குவா படத்துக்கு தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனம் வந்துகொண்டிருக்கிறது. மேலும் அமரன் படத்துக்கு screen-கள் அதிகரிக்கப்பட்டு, சூர்யா படத்திற்கு screen-கள் குறைக்க பட்டுள்ளது. படத்தின் இந்த தோல்விக்கு, இயக்குனரின் திரைக்கதையும், படத்தின் ப்ரோமோஷனின் போது செய்த ஓவர் பில்ட்டப் தான் காரணமாக உள்ளது.

இந்த நிலையில், படம் மாபெரும் வெற்றியடையும் என்று எதிர்பார்த்த சூர்யாக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. சூர்யா ரசிகர்கள் பலர், இனி சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்காதீர்கள் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர். மறுப்பக்கம் காதல் மனைவி, சூர்யக்காக போர்க்கொடி தூக்கியுள்ளார். அதில், தனது கருத்துக்களை பதிவிட்டதோடு, படத்தில் ஒரு சில சொதப்பல்கள் இருக்கிறது, அதற்காக இப்படி நெகட்டிவ் விமர்சனம் கொடுக்கும் அளவிற்கு படம் மோசமாக இல்லை என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜுக்கு சூர்யா போட்ட கண்டிஷன்

கங்குவா படம், சூர்யாவுக்கு சறுக்கலை கொடுத்த நிலையில், அவரது நடிப்பில், சூர்யா 44 படம் சீக்கிரமே வெளியாகவுள்ளது. படத்தின் போஸ்ட் ப்ரோடுக்க்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், சூர்யாவுடன் அந்த படத்தில் ஜோடி போட்டிருக்கு நடிகை பூஜா ஹெக்டே தன்னை அறியாமல் இது ஒரு அழகான காதல் படம் என்பதை உளறிவிட்டார்.

இப்படி இருக்க, கங்குவா படத்தில் பட்ட அடியை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது அடுத்த நகர்வுகளை கவனமாக எடுத்து வைக்கிறார். தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு சூர்யா ஒரு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளார்.

தனது அடுத்த பட ப்ரோமோஷனில் ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக பயன்படுத்த வேண்டும்… படத்தை பற்றி புகழவேண்டாம்… பில்ட்டப் கொடுக்காதீர்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் படத்தில் என்ன உள்ளதோ, அதையே ட்ரைலரில் காட்டுங்கள்.. பிடித்தால் வரட்டும் என்றும் கூறியுள்ளார். இதை பார்க்கும்போது, “பாவம் யா அந்த மனுஷன்.. இப்படி சூர்யாவை சிதைத்துவிட்டீர்களே டைரக்டர்..” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Comment