Vijay : 2026 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்நோக்கி காத்திருக்கிறது. எப்போதுமே தேர்தல் என்றால் பரபரப்பு இருக்கும் நிலையில் இந்த முறை கூடுதல் கவனத்தை பெற காரணம் விஜய் தமிழக வெற்றிக் கழக கட்சி தொடங்கியதுதான்.
ஆரம்பத்தில் அதிமுக, திமுக என இருமுனைப் போட்டியின் நிலவி வந்த நிலையில் சமீபத்தில் பாஜகவும் இதில் இணைந்தது. சின்ன கட்சிகளும் கூட்டணி வைத்து நல்ல வாக்குகளை இரு கட்சிகளும் பெற்று வந்தது. ஆனால் இப்போது விஜய்யின் அரசியல் கட்சியால் ஓட்டுகள் பிளவுபட வாய்ப்பு இருக்கிறது.
சமீபத்தில் ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக கூறியிருந்தனர். அதுவும் துணை முதல்வர் பதவி விஜய்க்கு கொடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
அதிமுகவுடன் கூட்டணியா TVK விளக்கம்
முற்றிலுமாக மறுப்பு தெரிவித்து இருக்கிறது தவெ கழகம். அதாவது இந்த கழகத்தின் பொதுச் செயலாளர் என் ஆனந்த் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதாவது எந்த ஆதாரமும் இல்லாமல் அதிமுகவுடன் கூட்டணி வைப்போம் என்று சிலர் சொல்லுவது முற்றிலும் தவறானது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
விஜய்யின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல் படி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகள் உடன் வெற்றி பெறுவதற்கான வேலையில் தயாராகி வருகிறோம். அதோடு துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது.
தளபதி விஜய் முதலமைச்சர் பதவியை தான் பெற வேண்டும். அதற்காக தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி மகுடத்தை விஜய் சூடுவார் என கூட்டணி கூறியிருக்கிறது. ஆகையால் அதிமுகவுடன் கூட்டணி என்பது வதந்தி என்று தெரியவந்துள்ளது.