சர்ச்சைக்குரிய படங்களை உருவாக்குவதற்கு பெயர் போனவர் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி. பாலிவுட்டில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழும் இவர், இதுவரை எடுத்த படங்கள் எல்லாமே பயங்கரமான படங்களாக தான் உள்ளது. கதை, திரைக்கதை, ஆர்ட்டிஸ்ட், ஒளிப்பதிவு என்று எதிலும் குறை சொல்லமுடியாது.
ஹிந்தியில் சர்வதேச தரத்தில் நல்ல படங்களை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மிஸ் பண்ணாம இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் இந்த படங்களை பாருங்கள்..
கங்குபாய் காத்தியாவாடி: இந்த படம் சர்ச்சைக்கு பெயர் போன, ரெட் லைட் ஏரியா சம்மந்தப்பட்ட படம், கங்குபாய் என்ற பெண்மணி கதாபாத்திரத்தில் விபச்சாரியாக நடித்திருப்பார் ஆலியா பட். இந்த படத்துக்கு நல்ல விமர்சனமும் பெயரும் கிடைத்தது. மேலும் இந்த படம் ஆலியா பட் கேரியரில் ஆகச்சிறந்த படமாக அமைந்துள்ளது.
பத்மாவத்: இந்த படம் பார்த்து அரண்டு போகாதவர்களே இல்லை. இந்தியாவில் நடைமுறையில் இருந்த கொடூர கலாச்சாரமான சதியை முன்னிறுத்தி, அதே நேரத்தில், ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த பெண்களின் தைரியத்தையும் முன்னிறுத்தி சிறப்பாக எடுத்திருப்பார் சஞ்சய் லீலா பன்சாலி. இந்த படத்தில், தீபிகா படுகோன், ரன்வீர் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான இந்த படம் பல எதிர்ப்புகளை தாண்டி வெளியான படமாக உள்ளது.
கோலியோன் கி ராசலீல ராம்லீலா : காதல் காவியம் இயக்குவதில் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியை யாராலும் மிஞ்சமுடியாது. அந்த அளவுக்கு தரமாக இருக்கும். 2013 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ஒரு சிறந்த காதல் படமாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் இந்த படத்திலிருந்து தான் தீபிகா படுகோனுக்கும் ரன்வீர் சிங்குக்கும் காதல் ஏற்பட்டது. படத்தின் பாடல்கள் எல்லாம் வேற லெவல் ஹிட் அடித்த நிலையில், அதுவே படத்தின் வெற்றிக்கு காரணமாக உள்ளது.
குஜாரிஷ்: இந்த படம், ஹ்ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் 2010-ஆம் ஆண்டு வெளியானது. இது ஒரு காதல் படம். வசூல் ரீதியாக இந்த படம் அவருக்கு ஆரம்பத்தில் கை கொடுக்கவில்லை என்றாலும், நல்ல விமர்சனம் பெற்ற படமாக உள்ளது.
பிளாக்: 2005-ல் வெளியான இந்த படம் பார்த்தவர்கள் கண்டிப்பாக கண்கலங்கி போவார்கள். இந்த படத்தை பார்த்த பிறகு ஆசிரியர்கள் மீது தனி மரியாதை வரும். அதே நேரத்தில், ஒரு இடத்தில் உள்ள காட்சி மட்டும் சர்ச்சைக்குரிய காட்சியாக மாறியது. இந்த படத்தை பார்த்து முடிக்கும்போது, காதலின் வெளிப்பாடு இப்படியும் இருக்கமுடியும் என்று அழகாக காட்டியிருப்பார் இயக்குனர்.
தேவதாஸ்: 2002-ல் வெளியான இந்த படத்தை பார்க்காத ஹிந்தி சினிமா lovers மிகவும் குறைவு. ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், மாதுரி தீக்ஷித் இணைந்து நடித்த இந்த படம், அந்த காலத்தில் கொண்டாடப்பட்ட காதல் காவியமாக உள்ளது. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வேற லெவல் ஹிட் அடித்த படமாக உள்ளது.