1. Home
  2. கோலிவுட்

ரூமில் பார்ட்டி! அவரை வெயிட் பண்ண சொல்லுங்க, பொக்கேவுடன் வந்த அஜித்துக்கு நடந்த அவமானம்

ரூமில் பார்ட்டி! அவரை வெயிட் பண்ண சொல்லுங்க, பொக்கேவுடன் வந்த அஜித்துக்கு நடந்த அவமானம்

90-களில் ஒரு இயக்குனர் ரொம்ப பிரபலமானவராக இருந்துள்ளார். அன்று அவருடைய பிறந்தநாள். சிரித்த முகத்தோடு நடிகர் அஜித் வாழ்த்து சொல்ல அவரை தேடி வந்துள்ளார். ஆனால் அவருக்கு அவமானம் மட்டுமே மிஞ்சியது. இந்த தகவலை தற்போது தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, "இந்த சம்பவம் 1995 ஆம் ஆண்டில் நடந்தது. அந்த காலத்தில் மிகவும் பிரபலமான இயக்குநர் ஒருவரின் பிறந்தநாள் விழா, ஹோட்டல் ஒன்றில் நடந்தது. அவருக்கு வாழ்த்து தெரிவிக்க அஜித்தும் பொக்கே உடன் வந்திருந்தார். அந்த இயக்குநர் ஹோட்டலில் இருந்த ஷூட்ரூமில் அப்போது பிரபலமாக இருந்த இயக்குநர்கள், நடிகர்கள் இசையமைப்பாளர்கள் உடன் பார்ட்டி செய்து கொண்டிருந்தார். ஒரே புகைமண்டலம் தான்.

இதனையடுத்து அங்கு சென்ற அஜித், அந்த இயக்குநரின் உதவியாளரை அழைத்து, தான் வந்திருப்பதாக இயக்குநரிடம் சொல்லுங்கள் என்று கூறினார். இதையடுத்து அந்த உதவி இயக்குநர் அஜித்தை உட்கார வைத்துவிட்டு, அந்த செய்தியை இயக்குனரிடம் சொல்வதற்காக ரூமுக்குள் சென்றார்.

செகண்ட் சான்ஸ் கொடுக்காத அஜித்

ரூமுக்கு சென்ற நபர் இரண்டு மணி நேரம் கழித்து வெளியில் வந்தார். அந்த இரண்டு மணி நேரமும் வெளியிலேயே உட்கார்ந்திருந்தார் அஜித். ஒரு கட்டத்தில் அவர் வெளியே வந்தார், அப்போது அவரை அழைத்த அஜித் சார், நான் வந்தேன் என்று சாரிடம் சொன்னீர்களா அதற்கு அவர் என்ன சொன்னார் என்று கேட்டார்.

அதற்கு அந்த உதவி இயக்குநர், நீங்கள் வந்திருப்பதை நான் இயக்குனரிடம் சொல்லி விட்டேன்; இருப்பினும் இன்னொரு முறை அவருக்கு ஞாபகப்படுத்துகிறேன் என்று கூறி மீண்டும் ரூமுக்குள் சென்றார். இதிலே அஜித் முகம் மாறிவிட்டது. உள்ளே சென்ற அந்த நபர் உடனே வெளியில் வந்து, "இன்னொரு நாள் சந்திக்கிறேன் என்று கூறினார்" என்று கூற அஜித் செம்ம டென்ஷன் ஆகிவிட்டார்.

கையில் ஆசையாக கொண்டு வந்த பொக்கேவை, அந்த நபரிடம் கொடுத்து விட்டு, "one day will come" என்று சொல்லிவிட்டு, விருட்டென்று சென்றுவிட்டார். அவர் சொன்னது போலவே, அந்த நாள் வந்துவிட்டது. அதன் பின் அந்த இயக்குனர் எத்தனையோ முறை அஜித்திடம் சான்ஸ் கேட்டும், இன்று வரை அஜித் கொடுக்கவில்லை.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.